ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் போட்டி: சீமான் தகவல்
புதுக்கோட்டை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 29-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வரும் 29-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும்” என்றார்.