ஆரோக்கியம்வாழ்வியல்

இயற்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்

1️⃣ குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீரருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

2️⃣ பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள்.
அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

3️⃣ புழு துளைத்த காய், கனிகளை உண்ணுங்கள்.
நச்சுக் காய், கனிகளை புழு துளைக்காது.

4️⃣ பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூசிகள் உட்காராது.

5️⃣ முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம்.
மரம் செழிப்பாக வளரும்.
பாம்பு ஓய்வெடுக்கும் இடத்தில் உங்கள் வீட்டைக் கட்டுங்கள். பாம்புகள் குளுமையான இடங்களில் மட்டுமே ஓய்வெடுக்கும்.

6️⃣ பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை
தோண்டுங்கள்.

7️⃣ பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள்..
நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

8️⃣ அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

9️⃣ மீன்களை போல அடிக்கடி நீரில் நீந்துங்கள்.
நீங்கள் பூமியில் நடக்கும் போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

🔟 அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

✳️ நீங்கள் அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும் ✳️

One thought on “இயற்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *