கவிதைகள்வாழ்வியல்

சிகரெட் ! கவிஞர் இரா .இரவி !

இழுக்க இழுக்க இன்பமன்று
இழுக்க இழுக்கத் துன்பம்
சிகரெட் !

புண்பட்ட மனதைப் புகை விட்டு
புண்ணாக்காதே மேலும்
சிகரெட் !

விரைவில் சாம்பலாவாய்
உணர்த்தும் சாம்பல்
சிகரெட் !

புகையில் வளையம்
உனக்கான மலர்வளையம்
சிகரெட் !

நடிகரைப் பார்த்துப் புகைக்காதே
உன்னை நீயே புதைக்காதே
சிகரெட் !
உனக்கு மட்டுமல்ல
சுற்றி இருப்பவருக்கும் நோய்
சிகரெட் !

வெள்ளையன் கற்பித்த
வெள்ளை உயிர்க்கொல்லி
சிகரெட் !

எந்தப் பெண்ணும்
என்றும் விரும்பவில்லை
சிகரெட் !

தூக்கம் வர விழிக்க
தயாரிக்கவில்லை
சிகரெட் !

ஆதியில் இல்லை
பாதியில் வந்த தொல்லை
சிகரெட் !

தீங்குத் தரும் கங்கு
தீண்டாது ஒதுங்கு
சிகரெட் !

உடல் நலத்திற்குக் கேடு
உடனே சிந்தித்து விட்டுவிடு
சிகரெட் !

முயன்றால் முடியும்
முடிவெடு வேண்டாம் என்று
சிகரெட் !

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *