“அந்தக் காலம் இந்தக் காலம்”
தேனீரை குவளையில் குடித்து மகிழ்ந்தது அந்தக்காலம்..!
பிளாஸ்டிக் குவளையில் குடித்து தேனீரும் விஷமாய் போனது இந்தக்காலம்..!
துணிப்பையில் துணிகள் வாங்கியது அந்தக்காலம்..!
துணிப்பையை தூர தூக்கி எறிந்தது இந்தக்காலம்..!
துன்பத்தை போக்கி துணையாய் துணிப்பை இருந்தது அந்தக்காலம்..!
துன்பங்கள் பலவுக்கும் துணையாய் பிளாஸ்டிக் பை நிற்க்குது இந்தக்காலம்..!
மண்ணின் வளத்தால் அதிக மகசூலை பெற்றது அந்தக்காலம்..!
மண்ணும் பிளாஸ்டிக்கால் மக்கிப்போனது இந்தக்காலம்..!
மண்பானையில் உணவை சமைத்து உண்டது அந்தக்காலம்..!
பிளாஸ்டிக்கவே உணவாய் உண்டு நடைபிணமாய் வாழ்வது இந்தக்காலம்..!
மக்கும் உரத்தால் மகசூலைப் பெற்றது அந்தக்காலம்..!
மக்காத பிளாஸ்டிக்கால் மகசூலை இழந்தது இந்தக்காலம்..!
பூவில் மாலை தொடுத்து இறைவனுக்கு போட்டது அந்தக்காலம்..!
அந்தப் பூவும் பிளாஸ்டிக்காக போனது இந்தக்காலம்..!
மரம் செடி கொடியால் நிலம் நிரம்பிக் கிடந்தது அந்தக்காலம்..!
மக்காத பிளாஸ்டிக்கால் நிலம் நிரம்பிக் கிடக்குது இந்தக்காலம்..!
நன்றி
மா.கணேஷ்