செய்திகள்நம்மஊர்

பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் புதுச்சேரி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் தற்கொலை | Puducherry University research student commits suicide due to stock market losses

புதுச்சேரி

பங்குச் சந்தையில் முதலீடு செய்ததில் ஏற்பட்ட நஷ்டத்தால் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர். இவர் தனது குடும்பத்தோடு மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் டேனியல் (31). இவர் பிள்ளைச்சாவடி அண்ணா நகர் பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பொருளாதார ஆய்வு படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக அவரது அறை திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் காலாப்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து பார்த்தபோது அழுகிய நிலையில் பிரவீன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அந்தஅறையில் போலீஸார் சோதனை நடத்திய போது அங்கிருந்த மேஜையில் தனது பெற்றோர் செல்போன் எண்ணை எழுதி வைத்திருந்தார். அதன்மூலம் போலீஸார் அவரதுதந்தை தர் மற்றும் அவரது குடும்பத்தி னருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தியதில், பிரவீன்டேனியல் பங்குச் சந்தையில் லட்சக்கணக் கில் முதலீடு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட திடீர் நஷ்டத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *