மழையோ மழை கவிஞர் மா.கணேஷ்
பொழியும்
பரவையில்
ஆழி மழை..!
அடிக்கும்
விடாமல்
சோனை மழை..!
தெளிக்கும்
பன்னீராய்
தூறல் மழை..!
விழும் பனி
கட்டி கட்டியாய்
ஆலங்கட்டி மழை..!
சிந்திவிடும்
சிகரங்களில்
பனி மழை..!
பட்டு விழும்
மலை மீது
சாரல் மழை..!
நிமிடங்களில்
நின்று பொழியும்
முகிற் பேழை மழை..!
அடித்து விடும்
அமைதியாய்
அடை மழை..!
நிரப்பி விடும்
நீர் நிலைகள்
பெரு மழை..!
கடினமாய்
பொழியும்
கன மழை..!
தணிக்க வரும்
வெப்பத்தை
கோடை மழை..!
வந்து விடும்
பருவம் பார்த்து
பருவ மழை..!
அடித்து விடும்
அந்திப் பொழுது
அந்தி மழை..!
பெய்து விடும்
இசையுடன்
இடி மழை..!
உகந்தது
ஏர் ஓட்ட
உழவு மழை..!
அழிக்க வரும்
அகிலத்தை
அமில மழை..!
வந்து விடும்
மனம் மகிழ்ந்தால்
ஆனந்த கண்ணீர் மழை..!
வந்து விடும்
மனம் கலங்கினால்
கண்ணீர் மழை..!
விரும்பிடுவார்
காதலர்கள்
காதல் மழை..!
மயங்க வைக்கும்
உயிரினை
இசை மழை..!
பிறந்து வரும்
கவிஞர்களிடம்
கவிதை மழை..!
நன்றி
கவிஞர் மா.கணேஷ்