கவிதைகள்வாழ்வியல்

சட்டம் எல்லோருக்கும் சமம்! கவிஞர் காரை வீரையா.

(கடவுள் தப்பு செய்தால்கூட வருந்திய ஆகணும் என்பதை உணர்த்தும் பாடல். )

பிறந்தாலும் பூமியிலே
பேர் சொல்லப் பிறக்க வேண்டும் இறந்தாலும் இவன்போல்
இனியொருவன் வருவானா என்று
பிறர் சொல்ல வேண்டும்.

(பிறந்தாலும்)

பிறப்பு இறப்பு காற்றடித்த பந்து, வாழ்க்கையில் கவனம் இல்லாமற் போனால்
கொண்ட கவுரவம் காணாமற் போய்விடுமே
காசு பணமெல்லாம் காணாமற்போன கவுரவத்தைத் திரும்பக் கொண்டுவரராது. கடவுள்கூட தப்பு செஞ்சாலும்
கட்டாயம் இதுக்காக வருந்திய ஆகணும் கட்டப்பஞ்சாயத்து பேசி கட்டுக்கட்டா பணத்தைப் பறிக்கிற காலம் மறையணும் சட்டம் எல்லோருக்கும் சமம்
சட்டத்தை வளச்சு ஒடிக்குற கூட்டத்தை அடியோடு அழிச்சே தீரணும்
காலம் அழிஞ்சாலும் மனிதனோட
நேசம் மட்டும் அழியாமல் இருக்கணும்.

(பிறந்தாலும்)

நன்றி
கவிஞர் காரை வீரையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *