சிறு துளி பெரும் பணம் சோமவள்ளியப்பன் (சிறுகதை சந்தர்ப்ப சூழ்நிலை)
பணம் சேமிப்பதற்கான எளிய பிராக்டிகல் வழிகள்
சிக்கனம் தவறில்லை.
சேமிப்பு வெட்கப்பட வேண்டியதில்லை சேர்த்து வைத்தல் நம் வருங்காலத்திற்காக குறைந்த செலவு செய்வது அசிங்கம் அல்ல நம் எதிர்கால தேவைகள் தற்காலத்தை விட அதிகம்.
வளர்த்து உண்ணுதல் புத்திசாலித்தனம் செலவு செய்பவர் அல்ல வைத்திருப்பவரே பணக்காரர்.
தானும் சம்பாதிக்க வேண்டும் தன் பணமும் சம்பாதிக்க வேண்டும் பணத்தினை மதிக்க வேண்டும்.
சேமிப்பு ஒரு பழக்கம்.
சோம வள்ளியப்பன்.
சிறுதுளி பெரும்பணம் ஆசிரியர் சோம வள்ளியப்பன் இவர் எழுதிய சிறு துளி பெரும் பணம் எனும் தொகுப்பில் இருந்து ஒவ்வொரு கதையாக நமது தமிழ் தீபத்தில் இனி காண்போம் முதல் கதையாக சந்தர்ப்ப சூழ்நிலை என்னும் கதையை காண்போம்.
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
சிறுகதை சந்தர்ப்ப சூழ்நிலை
சந்தர்ப்ப சூழ்நிலை
நான் வசிக்கும் வீட்டு அருகில் ஒரு முடி திருத்தும் நிலையம் இருக்கிறது பெயர் செல்வம் சலூன் நான் அந்த இடத்திற்கு குடிவந்த நாளிலிருந்து பார்க்கிறேன் சுமார் 10 ஆண்டுகளாக அதே இடத்தில் அந்த கடை இருக்கிறது நடுத்தர வயதினை தாண்டிய கடையின் உரிமையாளரிடம் நான் முடி வெட்டிக்கொள்ள மாட்டேன்.

அவரை தவிர்த்து விட்டு அவருடைய மகனிடம் தான் எப்போதும் காத்திருந்து வெட்டிக் கொள்ளுவேன் தொடர்ந்து அதே கடைக்கு போனதாலே என்னவோ எப்போது அவரது கடையை தாண்டி நடந்தாலும் முகம் பார்த்து புன்னகைப் பார் எளிமையான மனிதர் நல்ல உழைப்பாளி.
சில மாதங்களுக்கு முன் அவர் கடைக்குப் போயிருந்த போது அவர் முகம் வாட்டமாக இருப்பதை பார்த்தேன் விவரம் கேட்டேன் கடையின் அதிகம் பேர் இல்லை மனிதர் கடகடவென கொட்டினார் கட்டிட உரிமையாளர் கடையை காலி செய்ய சொல்லிவிட்டாராம் பத்து ஆண்டுகளாக இருக்கிறேன் திடீரென்று போகச் சொன்னால் எங்கே போவேன் என்றார். ஏன் காலி செய்ய சொல்கிறார்கள் என்றேன். இடித்துவிட்டு பெரிய கட்டிடமாக கட்டப் போகிறார்களாம் என்றார் அதில் என்ன தவறு அவர்தானே கட்டிடத்தின் உரிமையாளர் பேரிடம் பார்க்க வேண்டும்.
எதுவும் ஒத்துவரவில்லை அப்படியே வேறு இடத்தில் கிடைத்தாலும் வழக்கமாக வருகின்ற கஸ்டமர்கள் எல்லாம் தேடி வர மாட்டார்களே ஏன் வரமாட்டார்கள் இங்கே பக்கத்தில் ஏதாவது ஒரு இடம் பார்க்க வேண்டியதுதானே? இங்கேயா அடப் போங்க சார் எவனால இங்கே கேட்கிற வாடைக்கு அதைவிட முக்கியமா அட்வான்ஸ் கொடுக்க முடியும் அவர் சொல்லுவது சரிதான் என்று பட்டது வசதியானவர்கள் குடியிருக்கும் இடமாக மாறிவிட்டிருக்கிறது.
இடை விளையும் வாடகைகளும் மிக அதிகம் தான் சற்று தூரத்தில் குடிசை மாற்று வாரியத்தால் தொடங்கப்படாத இடம் ஒன்றின் பெயரினை சொல்லி அங்கே தான் போய் கடை போட வேண்டி இருக்கும் என்றார். சொல்லிவிட்டு அவர் முணுமுணுத்தது தான் என் காதுகளில் தெளிவாக கேட்டது
அவர் சங்கடப்பட்டு மெல்லிய குரலில் தனக்குத்தானே பேசிக் கொண்டது இதனைத் தான் இம்மாம் வருஷம் இருந்தேனே ஒரு இடத்தை வாங்கி போட்டிருக்கக் கூடாது அதானே என்றேன் தொடர்ந்து இவ்வுல வருஷத்துல ஏதாவது சேர்த்து வச்சிருப்பீங்களா இல்லையா அதுல அட்வான்ஸ் கொடுக்க வேண்டியது தானே என்று கேட்டேன்.
அட போங்க சார் அப்படியெல்லாம் சேர்த்து வைக்க தெரியலையே எனக்கு என்ன ஒரு பொண்ணுக்கும் பையனுக்கும் கல்யாணம் செஞ்சேன் கடன் இல்லை. அவ்வளவுதான் மத்தபடி கையில ஒரு தம்பிடி கிடையாது பின்பு ஒருநாள் வழியில் பார்த்து சிறிய விசிட்டிங் கார்டு கொடுத்தார்.

அதில் வேறு இடத்தில் அமைந்திருக்கும் அவரது கடையின் முகவரி அச்சிடப்பட்டிருந்தது அதற்கு அது 15 நாட்களில் அவர் கடை காலியானது வெளியில் பச்சை நிறத் துணி கட்டினார்கள் இடிக்க ஆரம்பித்தார்கள்.
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
அதே தலைப்பில் மற்றும் ஒரு கதை
விற்பனையாளர் வேலைக்கு ஆட்கள் கேட்டிருந்தோம். பலரும் விண்ணப்பித்திருந்தார்கள் அதில் ஒருவர் வயது 45 அந்த வேலைக்கு கொடுக்கக்கூடிய ஊதியமும் மாதம் ரூபாய் 10,000 .

எம்ஏ படித்திருக்கும் ஒருவர் இந்த வயதில் இந்தக் குறைய ஊதியத்திற்கு அதிலும் அலைந்து சுற்ற வேண்டிய விற்பனையாளர் வேலைக்கு வருகிறேன்
என்று விண்ணப்பித்தார் என்று நினைத்தேன் வந்தார் பேசினார் விவரம் கேட்டேன் சொன்னார்.
20 வருஷமா ஆட்டோமொபைல் ஸ்டோர் பார்ட்ஸ் கடை வைத்திருந்தேன் 3 மாசம் முன்னாடி மூடிட்டேன் அதனால் வேலைக்கு வர வேண்டியதாகிவிட்டது.

“அப்படியா?”
“ஆமாம்”
“சொந்தக்கடையா?
” ஆமாம். நான்தான் ஓனர் “
” ஏன் மூடிட்டிங்க?”
” கடைய காலி பண்ண சொல்லிட்டாங்க வேற இடம் போக முடியல அட்வான்ஸ் ரொம்ப கேட்டாங்க என்னால தர முடியல.
அப்படியா சரி இருக்கும் தான்”.
” ஆனால் இருபது வருஷமா சம்பாதிச்சிட்டீங்களே அதை சேர்த்து வைக்கலையா அதுல இருந்து கொடுக்க வேண்டியதுதானே! “
” அட்வான்ஸ் 3 லட்சம் இல்ல கேட்டாங்க நான் எங்க போவேன் மூணு லட்சத்துக்கு” .
“இத்தனை வருஷத்துக்கு மூன்று லட்சம் கூட லாபம் வரல்ல” .
“வந்திருக்கும் சார். அனாதை எங்கே இருக்கிறது தான் தெரியல” .
“வந்ததை சாப்பிட்டு விட்டிங்களாக்கும்” .

ஆமா பின்ன.. மூணு பிள்ளைங்களை.. நானு, பொண்டாட்டி. அஞ்சு பேர் தினமும் சாப்பிடனும் இல்லையா..
“கண்டிப்பா!” 🙄
நாம் பார்த்த இந்த கதையில் இரண்டும் ஒரே சூழ்நிலை தான். ஆனால் வெவ்வேறு பட்ட மனநிலையில் உள்ள மனிதர்கள்.நாம் தேர்ந்தெடுக்கும் வழிகள் சரியாக இருக்க வேண்டும். எதையும் சமாளிக்கும் மனநிலையை சூழ்நிலையும் நாம் தான் ஏற்படுத்த வேண்டும்.

😊😊😊😊😊