ஆன்மிகம்கதைகோவில்தெய்வீக குறிப்புகள்

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 10 (Sri Sai Satcharitam Chapter – 10)

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் அத்தியாயம் – 10 (Sri Sai Satcharitam Chapter – 10)

அத்தியாயம் – 10

சாயிபாபாவின்‌ வாழ்க்கை நடைமுறை – அவர்‌ படுக்கும்‌ பலகை – ஷீர்டியில்‌ அவரின்‌ வாசம்‌ – அவரின்‌ அறிவுரைகள்‌ – அவரின்‌ பணிவு – மிகவும்‌ எளிய வழி.

அன்புடன்‌ எப்போதும்‌ அவரையே (சாயிபாபாவையே) நினைவூட்டிக்கொள்ளுங்கள்‌. ஏனெனில்‌ அனைவர்க்கும்‌ நன்மை செய்யும்‌ கவனத்தால்‌ கவரப்பட்டு, ஆத்மாவிலேயே உறைந்து நின்றார்‌. வாழ்வு, சாவு என்னும்‌ புதிரை விடுவிக்கும்‌ வழி, அவரை நினைவுபடுத்திக்கொள்வது மட்டுமே. சாதனைகளிலேயே இதுதான்‌ மிகமிக எளியதும்‌ சிறந்ததுமான சாதனையாகும்‌. ஏனெனில்‌ அது எவ்விதச்‌ செலவையும்‌ உள்ளடக்காதது. இங்கு ஒரு சிறு முயற்சி பெரும்‌ பரிசுகளைக்‌ கொணர்கிறது. நமது புலன்கள்‌ எல்லாம்‌ நல்லமுறையில்‌ இருக்குந்தோறும்‌ நிமிடத்திற்கு நிமிடம்‌, இந்தச்‌ சாதனையைப்‌ பழகவேண்டும்‌. மற்ற எல்லாத்‌ தேவதைகளும்‌ வெற்றுத்‌ தோற்றமே. குருவே ஒரே கடவுள்‌. சத்குருவின்‌ புனிதத்‌ திருவடிகளை நினைவு கூர்வோமானால்‌, அவர்‌ மேலும்‌ சிறப்பான நிலைக்கு நமது அதிர்ஷ்டத்தை மாற்றிவிட இயலும்‌. அவருக்குச்‌ சிறப்பாகச்‌ சேவை செய்வோமானால்‌, நரம்‌ நமது சம்சாரத்தினின்று விடுபடுகிறோம்‌. நியாயம்‌, மீமாம்ஸம்‌ போன்ற தத்துவங்களை நாரம்‌ பயிலத்‌ தேவையில்லை.

அவரை நமது வழிகாட்டியாக நரம்‌ அமைத்துக்கொள்வோமானால்‌, நமது அனைத்துத் துன்பங்கள்‌, கவலைகள்‌ என்னும்‌ கடலை எளிதாகக்‌ கடந்து செல்லலாம்‌. ஆற்றையும்‌, கடலையும்‌ கடப்பதில்‌ நாம்‌ மாலுமியை நம்பியிருப்பதைப்‌ போன்றே, இவ்வுலக வாழ்வெனும்‌ கடலைக்‌ கடப்பதில்‌, நமது சத்குருவை நாம்‌ நம்பவேண்டும்‌. தமது அடியவர்களின்‌ தீவிரமான உணர்வையும்‌, பக்தியையும்‌ அவர்‌ நோக்கி ஞானத்தையும்‌, சாஸ்வதமான கழிபேருவகையையும்‌ அவர்களுக்கு கரித்தாக்குகிறார்‌.

கடந்த அத்தியாயத்தில்‌ பாபாவின்‌ பிச்சையைப்‌ பற்றியும்‌, பக்தர்களின்‌ அனுபவங்களைப்பற்றியும்‌, மற்ற விஷயங்களைப்பற்றியும்‌ கூறப்பட்டது. பாபா எவ்வாறு வாழ்ந்தார்‌, எவ்வாறு தூங்கினார்‌, எவ்வாறு கற்பித்தார்‌ என்று வாசகர்கள்‌ தற்போது கேட்பார்களாக!

பாபாவின்‌ அற்புதமான படுக்கும்‌ பலகை

பாபா எங்கு, எவ்வாறு தூங்கினார்‌ என்பதைக்‌ காண்போம்‌. நான்கு முழம்‌ நீளமும்‌, ஒரு முழம்‌ அகலமும்‌ உள்ள பலகையை பாபா படுத்து உறங்குவதற்காக நானா சாஹேப்‌ டேங்க்லே கொணர்ந்தார்‌. அதனைத்‌ தரையில்‌ போட்டு அதன்மீது படுத்து உறங்குவதற்குப்‌ பதிலாக மசூதியின்‌ உத்தரங்களில்‌ இற்றுப்போன கந்தல்‌ துணிகளால்‌ அதை ஒரு ஊஞ்சல்போல்‌ கட்டி, அதன்மீது படுத்துறங்க ஆரம்பித்தார்‌. எப்படி பாபாவின்‌ உடலை அது தாங்குகிறது என்பது ஒருபுறம்‌ இருக்க, தனியாகப்‌ படுக்கையையே தாங்குவது பிரச்சினையாக உள்ள அளவுக்கு மெல்லியதாகவும்‌, இற்றுப்போயும்‌ அக்கந்தல்‌ துணி இருந்தது. ஆனால்‌ எவ்விதமாகவோ பாபாவின்‌ லீலையால்‌ மட்டுமே அக்கந்தல்‌ துணி பாபாவின்‌ கனத்துடன்‌, பலகையையும்‌ தாங்கவே செய்தது. பலகையின்‌ நான்கு மூலைகளிலும்‌, மூலைக்கொரு மண்விளக்கு வீதம்‌ ஏற்றி, இரவு முழுவதும்‌ எரிந்துகொண்டிருக்கும்படியாக வைப்பார்‌.

இப்பலகையின்மீது பாபா அமர்ந்து கொண்டிருப்பதையோ, துயின்றுகொண்டிருப்பதையோ கண்ணுறும்‌ தரிசனமானது தேவர்களுக்கும்‌ கிடைப்பதற்கு அரியதொன்றாகும்‌! அதில்‌ பாபா, எங்ஙனம்‌ ஏறி இறங்கினார்‌ என்பது அனைவருக்கும்‌ வியப்பை விளைவிப்பதாய்‌ இருந்தது. இதனை அறியும்‌ ஆர்வத்துடன்‌ பாபா ஏறுவதையும்‌, இறங்குவதையும்‌ காண்பதற்காகப்‌ பல கவனமுள்ள பார்வையாளர்கள்‌ பார்த்துக்கொண்டிருந்தபோதிலும்‌ ஒருவரும்‌ அதனைக்‌ காண்பதில்‌ வெற்றிபெறவில்லை. இவ்விசித்ரமான அருஞ்செயலை நுணுகிக்‌ காண்பதற்காக கூட்டம்‌ அதிகரிக்கவே, ஒருநாள்‌ பாபா பலகையைத்‌ துண்டுதுண்டாக உடைத்து எறிந்துவிட்டார்‌. எட்டுவிதமான மஹாசித்திகளும்‌ (அஷ்டமா சித்திகள்‌), பாபாவின்‌ ஆணையில்‌ இருந்தன. அவர்‌ அவைகளை ஒருபோதும்‌ பயிற்சிக்கவோ அல்லது அவைகளுக்காக ஏங்கவோ இல்லை. அவைகள்‌ பாபாவின்‌ முழுமையினால்‌ தாமாகவே அவரை வந்தெய்தின.

பிரம்மத்தின்‌ உருவ வெளிப்பாடு

ஐந்தடி மூன்று அங்குல உயரமுள்ள மனிதனைப்போல்‌ பாபா தோற்றமளித்தாலும்‌, அனைவரின்‌ இதயத்திலும்‌, அவர்‌ வாழ்ந்தார்‌. அந்தரங்கமாக அவர்‌ பந்தமற்றவராகவும்‌, அக்கறையற்றவராகவும்‌ இருந்தாலும்‌, பகிரங்கத்தில்‌ பொதுமக்களின்‌ நலத்தை விரும்பினார்‌. அகத்திலே மிகவும்‌ ஆர்வமற்றவராக இருப்பினும்‌, புறத்தில்‌ தமது பக்தர்களுக்காக ஆசைகள்‌ நிரம்பப்பெற்றவராக இருந்தார்‌. உள்ளே சாந்தத்தின்‌ இருப்பிடமாக அவர்‌ இருப்பினும்‌, வெளியில்‌ இருப்புக்‌ கொள்ளாதவராய்‌ இருந்தார்‌. அந்தரங்கமாய்‌ பிரம்மானந்த நிலையை அவர்‌ எய்தியவராய்‌ இருந்தார்‌. பகிரங்கமாய்‌ பிசாசைப்போன்று நடந்துகொண்டார்‌. அந்தரங்கமாய்‌ அவர்‌ அத்வைதத்தை விரும்பினார்‌. பகிரங்கமாய்‌ உலகோடு கட்டுப்பட்டவராய்‌ இருந்தார்‌. சில நேரங்களில்‌ அனைவரையும்‌ பாசம்‌ ததும்ப நோக்கினார்‌. சில சந்தர்ப்பங்களில்‌ அவர்கள்மீது கற்களை விட்டெறிந்தார்‌. சில சமயம்‌ அவர்களைக்‌ கடிந்துகொண்டார்‌. சில சந்தர்ப்பங்களில்‌ அவர்களை அன்புடன்‌ அரவணைத்தார்‌. அமைதியாகவும்‌, பதட்டமற்றவராகவும்‌, பொறுமையுள்ளவராகவும்‌, நல்ல சமநிலையுள்ளவராகவும்‌ இருந்தார்‌. ஆத்மாவிலேயே‌ உறைந்து அதனாலேயே கவரப்பட்டு அதன்‌ வயமாக ஆனார்‌. தமது பக்தர்களுக்காகச்‌ செய்யவேண்டியவற்றை நன்கு செய்துமுடித்தார்‌. எப்போதும்‌ அவர்‌ ஒரே ஆசனத்தில்‌ அமர்ந்திருந்தார்‌. ஒருபோதும்‌ பிரயாணம்‌ செய்யவில்லை.

அவரது தண்டம்‌* சிறு குச்சியேயாகும்‌. அதை எப்போதும்‌ தமது கையில்‌ எடுத்துச்சென்றார்‌. சாந்தமாகவும்‌, எண்ணங்களில்‌ இருந்து விடுபட்டவராகவும்‌ இருந்தார்‌. செல்வத்தையும்‌, புகழையும்‌ அவர்‌ லட்சியம்‌ செய்யாது, பிச்சை எடுத்தே வாழ்ந்தார்‌. இத்தகைய வாழ்க்கையையே அவர்‌ நடத்தினார்‌. “அல்லா மாலிக்‌” (இறைவனே எஜமானர்‌) என்று அவர்‌ எப்போதும்‌ சொல்லிக்கொண்டிருந்தார்‌. அடியவர்களிடம்‌ அவர்‌ கொண்டிருந்த அன்பு ஏராளமானதும்‌, தடையற்றதும்‌ ஆகும்‌. ஆத்மஞானச்‌ சுரங்கமாகவும்‌, பரமானந்தம்‌ முழுமையும்‌ நிரம்பப்பெற்றவராகவும்‌ இருந்தார்‌.

சாயிபாபாவின்‌ தெய்வீகரூபம்‌ இத்தகையது. அத்தகைய எல்லையற்ற, முடிவற்ற, பாகுபாடற்ற புல்‌ – பூண்டிலிருந்து பிரம்மா வரையுள்ள பிரபஞ்சமனைத்தையும்‌ அரவணைக்கும்‌ ஏகதத்துவமே சாயிபாபாவாக அவதரித்தது. உண்மையில்‌ தகைமையும்‌, நல்ல அதிர்ஷ்டமும்‌ பெற்ற மக்கள்‌ சாயிபாபா என்ற பொக்கிஷப்‌ புதையலைப்‌ பெற்றனர்‌. உண்மையான மதிப்பை அறியாதவர்கள்‌, அவரை ஒரு மனிதனாக, சாதாரண மானிடப்‌ பிறவியாகக்‌ கருதினார்கள்‌, கருதுகிறார்கள்‌?! அவர்கள்‌ உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள்‌ ஆகிறார்கள்‌.

பாபாவின்‌ வீர்டி வாசமும்‌, பிறந்த ஆண்டு பற்றிய அனுமானமும்‌

சாயிபாபாவின்‌ சரியான பிறந்தநாளையும்‌, அவரது பெற்றோரையும்‌ ஒருவரும்‌ அறியார்கள்‌. அவரது ஷீர்டி வாசத்தில்‌ இருந்து அதை ஏறக்குறையத்‌ தீர்மானிக்கலாம்‌.

* சன்னியாசிகள்‌, துறவின்‌ அடையாளமாக எப்போதும்‌ தங்களுடன்‌ வைத்துக்கொண்டிருக்க வேண்டிய நீளமான மூங்கில்‌ கோல்‌. அவர்‌ பதினாறு வயதுப்‌ பாலகனாக இருக்கும்போது முதலில்‌ ஷீர்டிக்கு வந்தார்‌. மூன்றாண்டுகள்‌ அங்கு தங்கியிருந்தார்‌. பின்னர்‌ திடீரென்று சில காலம்‌ மறைந்துவிட்டார்‌. சிறிது காலத்திற்குப்பின்‌ நைஜாம்‌ ஓளரங்காபாத்துக்கு அருகில்‌ இருபது வயது நிரம்பி இருக்கும்போது தோன்றினார்‌. மீண்டும்‌ ஷீர்டிக்கு, சாந்த்‌ பாடீலின்‌ கல்யாண கோஷ்டியுடன்‌ திரும்பினார்‌. பின்னர்‌ தொடர்ந்து அறுபது ஆண்டுகள்‌ அவர்‌ ஷீர்டியில்‌ வாழ்ந்தார்‌. அதற்குப்‌ பின்னர்‌ 1918ஆம்‌ ஆண்டில்‌ மஹாசமாதி அடைந்தார்‌. இதில்‌ இருந்து பாபாவின்‌ பிறந்த வருடம்‌ ஏறக்குறைய 1838ஆக இருக்கலாம்‌ என்று கூற இயலும்‌.

பாபா மேற்கொண்ட பணியும்‌, உயதேசமும்‌

முனிவர்‌ ராம்தாஸ்‌ (1608 – 1681) பதினேழாம்‌ நூற்றாண்டில்‌ செழித்தோங்கி விளங்கினார்‌. பசுக்களையும்‌, அந்தணர்களையும்‌, யவனர்களிடமிருந்து (மொஹாலயர்களிடமிருந்து) காப்பாற்றுதல்‌ என்னும்‌ தாம்‌ மேற்கொண்ட குறிக்கோளை பெருமளவிற்கு நிறைவு செய்தார்‌. ஆனால்‌ அவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப்‌ பின்னர்‌, இரு வகுப்பினர்களுக்குள்ளும்‌ மீண்டும்‌ (ஹிந்து, முஸ்லிம்களுக்குள்‌) வேற்றுமை அதிகரித்தது அந்தப்‌ பாதாளப்‌ பள்ளத்தினை இணைக்கும்‌ பாலமாக சாயிபாபா விஜயம்‌ செய்தார்‌.

அனைவருக்கும்‌ அவர்தம்‌ நிரந்தரமான உபதேசத்தின்‌ உட்கருத்து இவ்வாறானதாகும்‌. “ராமரும்‌ (ஹிந்துக்களின்‌ தெய்வம்‌) – ரஹீமும்‌ (முஸ்லிம்களின்‌ தெய்வம்‌) ஒன்றே ஒன்றுதான்‌. அவர்களுக்குள்‌ எள்ளளவும்‌ வேற்றுமை இல்லை. பின்னர்‌ ஏன்‌ அவர்களின்‌ அடியவர்கள்‌ சச்சரவு புரிந்து தங்களுக்குள்‌ சண்டையிட்டுக்கொள்கின்றனர்‌? கள்ளங்கபடு அறியாத மக்களாக கைகோர்த்து இருவகுப்பினரும்‌ ஒன்றாயிணைந்து விவேகத்துடன்‌ நடந்துகொள்ளுங்கள்‌. இங்ஙனமாக உங்களது குறிக்கோளாகிய தேசீய ஒற்றுமையை ஈட்டப்‌ பெறுவீர்கள்‌. போராடி வாதாடுதல்‌ நன்றன்று. எனவே விவாதிக்க வேண்டாம்‌. மற்றவர்களுடன்‌ போட்டிபோட வேண்டாம்‌. எப்போதும்‌ உங்களது அக்கறையினையும்‌, நலத்தினையுமே கருத்தில்‌ கொள்வீர்களாக.

கடவுள்‌ உங்களைக்‌ காப்பாற்றுவார்‌. யோகம்‌, தியாகம்‌, தவம்‌, ஞானம்‌ என்பன கடவுளையறியும்‌ நெறிகள்‌. இந்த வழிகளில்‌ ஏதேனும்‌ ஒன்றன்‌ மூலம்‌ நீங்கள்‌ இதில்‌ வெற்றிபெற இயலாவிடில்‌, உங்கள்‌ பிறப்பு வீணேயாகும்‌. யாரேனும்‌ ஏதாவது தீமையை உங்களுக்குச்‌ செய்வாரேயாகில்‌, அதற்காகப்‌ பழிக்குப்‌ பழி வாங்காதீர்கள்‌. நீங்கள்‌ ஏதேனும்‌ செய்ய இயலுமானால்‌ பிறருக்குச்‌ சிறிது நன்மையைச்‌ செய்வீராக!”.  இது அனைவருக்கும்‌ சாயிபாபா அளித்த உபதேசத்தின்‌சுருக்கம்‌. இது லெளகிக, ஆன்மிக விஷயங்கள்‌ இரண்டிலுமே நலம்‌ பயப்பதாகும்‌.

சத்குருவாக சாயிபாபா

ஏராளமான குருக்கள்‌ இருக்கின்றனர்‌. தங்கள்‌ கரங்களில்‌ ஜால்ரா, தாளக்கருவி, வீணை சகிதம்‌ வீடுதோறும்‌ சென்று தமது ஆத்மிகத்தைப்‌ படாடோபம்‌ செய்துகொள்ளும்‌ குருக்கள்‌ உண்டு. அவர்கள்‌ மந்திரங்களைத்‌ தமது சீடர்களின்‌ காதில்‌ ஓதி அவர்களிடமிருந்து பணத்தைக்‌ கறப்பர்‌. தமது சீடர்களுக்கு கடவுள்பற்றையும்‌, கடவுள்‌ நம்பிக்கையையும்‌ உபதேசிப்பதாக உணர்ச்சி வகையில்‌ வெளிப்படையாகக்‌ காட்டிக்கொள்வர்‌. ஆனால்‌ அவர்களே இறையனுபவம்‌ அற்றவராக இருப்பர்‌. ஆனால்‌ சாயிபாபா தமது தகைமையையும்‌ (கடவுள்பற்று), மெய்யுணர்வையும்‌ காண்பிப்பதற்கு எவ்விதச்‌ சிறிய முயற்சியையும்‌ எடுக்கவேயில்லை. அடியவர்களிடம்‌ பெருமளவு அன்பு கொண்டிருந்தார்‌. இரண்டுவிதமான குருக்கள்‌ இருக்கின்றனர்‌. (1) நியத்‌ (நியமிக்கப்பட்டவர்‌ – குறிக்கப்பட்டவர்‌) (2) அநியத்‌ (நியமிக்கப்படாதவர்‌ – பொதுவானவர்‌). பின்னவர்கள்‌ தங்கள்‌ உபதேசங்களால்‌ நம்மிடத்தில்‌ உள்ள நற்பண்புகளை அபிவிருத்தி செய்கின்றனர்‌. நமது இதயத்தைத்‌ தூய்மைப்படுத்துகின்றனர்‌. நம்மை வீடுபேற்றை அடையும்‌ பாதையில்‌ செல்லத்தூண்டுகின்றனர்‌. இதற்கு மாறுபாடாக முன்னவர்களாகிய குருக்களோ நமது தனி இயல்பை (பேத உணர்வை) அழித்து “நீயே அது!” என்று உணரச்‌ செய்து, நம்மை ஏகத்வத்தில்‌ ஸ்தாபிக்கின்றனர்‌. பல்வேறு வகையான உலக ஞானத்தை அளிக்கும்‌ பல திறத்தான குருக்கள்‌ இருக்கின்றனர்‌. ஆனால்‌ நம்மை நமது இயற்கையில்‌ (ஆத்மாவில்‌) நிலைப்படுத்தி உலக வாழ்வெனும்‌ சாகரத்துக்கு அப்பால்‌ நம்மைச்‌ சுமந்து செல்பவரே சத்குரு எனப்படுவார்‌.

சாயிபாபா அத்தகைய ஒரு சத்குரு ஆவார்‌. அவருடைய பெருமையை விவரிக்க இயலாது. யாரேனும்‌ பாபாவின்‌ தரிசனத்தைப்‌ பெறச்சென்றால்‌, கேட்கப்படாமலேயே அவரது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களின்‌ ஒவ்வொரு விவரத்தையும்‌ உரைப்பார்‌. எல்லா ஜீவராசிகளிடமும்‌ அவர்‌ தெய்வீகத்தைக்‌ கண்டார்‌. நண்பர்களும்‌, பகைவர்களும்‌ அவருக்கு ஒன்றே. அவாவற்றவராகவும்‌ சமன்‌ செய்யப்பட்டவராகவும்‌ இருந்த அவர்‌ தீயோருக்கும்‌ கட்டுப்பட்டுச்‌ செவி சாய்த்தார்‌. சுபிட்சத்திலும்‌, எதிரிடையான சூழ்நிலையிலும்‌ அவர்‌ ஒரே மாதிரியாய்‌ இருந்தார்‌. எப்போதும்‌, எவ்வித ஐயமும்‌ அவரைத்‌ தீண்டவில்லை. இவ்வுடம்பில்‌ அவர்‌ இயங்கினாரெனினும்‌ எள்ளளவும்‌ தமது உடம்பிலேயோ, வீட்டிலேயோ பற்றற்றவராகவே இருந்தார்‌. உடலுருக்கொண்டு அவர்‌ தோற்றமளித்தாலும்‌ உண்மையில்‌ அருவமானவர்‌. அதாவது இந்த வாழ்க்கையிலிருந்தே விடுதலையானவர்‌.

அத்தகைய சாயியை தங்கள்‌ கடவுளாக வழிபட்ட ஷீர்டி மக்கள்‌ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்‌. அவர்கள்‌ உண்ணும்போதும்‌, அருந்தும்போதும்‌, புழக்கடையிலும்‌, வயலிலும்‌ மற்றபிற இல்லற தர்மங்களைச்‌ செய்யும்போதும்‌ சாயியை நினைவுகூர்ந்தார்கள்‌. அவர்தம்‌ புகழைப்‌ பாடினார்கள்‌. சாயியை தவிர பிறிதொரு கடவுளை அவர்களுக்குத்‌ தெரியாது. ஷீர்டியில்‌ வசித்த பெண்களின்‌ அன்பின்‌ இனிமையை எங்ஙனம்‌ விவரிக்கமுடியும்‌! அறியாதவர்களாக இருப்பினும்‌ அவர்களின்‌ தூயஅன்பு எளிய கிராமியமொழியில்‌ பாபாவின்‌ புகழை கவிதையாகவும்‌, தெம்மாங்குப்‌ பாடலாகவும்‌ பாட உணர்வூட்டியது. எழுத்தறிவு அவர்களிடம்‌ இல்லையாயினும்‌ உண்மை கவித்துவத்தை அவர்களின்‌ எளிமையான பாடல்களில்‌ தெளிவாக உணரமுடியும்‌. படிப்பறிவு அன்று! ஆழ்ந்த அன்பே அத்தகைய பொருள்செறிந்த பாடல்களை வெளிக்கொணர்ந்தது. அப்பாடல்கள்‌ ஆழ்ந்த அன்பின்‌ வெளிப்பாடே. சற்றே அறிவுக்கூர்மையுள்ள ஆர்வலரால்‌ அவற்றை உணர்ந்து இன்புறமுடியும்‌.

இந்த கிராமியப்‌ பாடல்களை சேகரித்து தொகுப்பது மிகவும்‌ அவசியமான ஒன்று. பாபாவின்‌ விருப்பத்தால்‌ அதிர்ஷ்டமுடைய பக்தர்‌ எவரேனும்‌ இப்பணியை மேற்கொண்டு சாயிலீலா சஞ்சிகையிலோ அல்லது தனிப்புத்தகமாகவோ பிரசுரிக்கலாம்‌.

பாபாவின்‌ ராணிவுடைமை

பரமாத்மா அல்லது கடவுள்‌ ஆறு குணாதிசயங்களை உடையவராகக்‌ கூறப்படுகிறது. அதாவது (1) புகழ்‌, (2) செல்வம்‌, (3) பற்றின்மை, (4) ஞானம்‌, (5) பேராற்றல்‌, (6) வள்ளன்மை ஆகியவையாகும்‌. பாபா, இவை அனைத்தையும்‌ தன்னிடத்துடையவராக விளங்கினார்‌. இவ்வுடம்பில்‌ அடியவர்களுக்காக அவதரித்தார்‌. அவரது அருளும்‌, அன்பும்‌ அதிசயக்கத்தக்கவை. ஏனெனில்‌ தமது அடியவர்களை தம்மிடம்‌ ஈர்த்து இழுத்தார்‌. இல்லாவிடில்‌ யார்தான்‌ அவரை அறிந்திருக்க இயலும்‌! அவர்‌ தமது பக்தர்களின்‌ பொருட்டாக வாக்கின்‌ தெய்வம்‌ (சரஸ்வதிதேவி) கூட உரைக்கத்‌ துணியாத அத்தகைய சொற்களை அவர்‌ கூறினார்‌. அதற்கு இதோ ஓர்‌ உதாரணம்‌, மிகவும்‌ எளிமையுடன்‌ அவர்‌ கூறியது பின்வருமாறு. “நான்‌ அடிமைகளுள்‌ அடிமை. உங்களுக்குக்‌ கடன்பட்டவன்‌. உங்களது தரிசனத்திலேயே திருப்தியடைகிறேன்‌. தங்களது திருவடிகளைத்‌ தரிசிக்கும்‌ பெரும்‌ பாக்கியம்‌ பெற்றேன்‌. நான்‌ தங்களது மலத்திலுள்ள ஒரு புழு. அங்ஙனமாகவே என்னை நான்‌ ஆசீர்வதிக்கப்பட்டவனாகக்‌ கருதுகிறேன்‌ மூலம்‌ சாயிக்கு எத்தகைய அவமரியாதையாவது செய்யப்பட்டது என்று எவரேனும்‌ நினைப்பாரேயாகில்‌, அவர்களிடம்‌ மன்னிப்பை வேண்டிக்கொள்கிறோம்‌. இதற்குப்‌ பிராயச்சித்தமாக பாபாவின்‌ நாமத்தைப்‌ பாடி ஜபிப்போமாக!

பாபா வெளிப்படையாக உணர்ச்சி நுகர்வுக்கூறு மற்றும்‌ பொருட்களால்‌ மகிழ்பவர்போல்‌ தோன்றினாலும்‌, அவருக்கு அவைகளில்‌ எள்ளளவும்‌ தனிச்சுவைத்‌ திறமோ அவைகளை மகிழ்ந்து அனுபவிக்கும்‌ பிரக்ஞையோ இருந்ததில்லை. அவர்‌ உண்டார்‌ எனினும்‌, சுவை அறியவில்லை. பார்த்தாரெனினும்‌, பார்த்தவைகளில்‌ அவர்‌ எவ்வித விருப்பையும்‌ உணர்ந்திருக்கவில்லை. காம உணர்வுகளைப்‌ பற்றிக்‌ கருதுங்கால்‌ அவர்‌ ஹனுமானைப்‌ போன்ற பூரண பிரம்மச்சாரியாவார்‌. எதன்பாலும்‌ பற்றற்றவராக இருந்தார்‌. அவரே தூய உணர்வுகளின்‌ திரளாகவும்‌ ஆசை, கோபம்‌, மற்ற உணர்ச்சிகள்‌ அடங்கி அமைதியுறும்‌ இடமாகவும்‌ திகழ்ந்தார்‌. சுருக்கமாக அவர்‌ அவாவற்றவர்‌, கட்டற்றவர்‌, முழு நிறைவானவர்‌. இக்கூற்றைச்‌ சித்தரிக்கும்‌ வகையில்‌ ஒரு அதிசய நிகழ்ச்சியைக்‌ கூறலாம்‌.

நானாவலி

ஷீர்டியில்‌ நானாவலி என்ற பெயரில்‌ தனிப்போக்குள்ள விசித்திரமான மனிதன்‌ ஒருவன்‌ இருந்தான்‌. அவன்‌ பாபாவின்‌ வேலைகளையும்‌, காரியங்களையும்‌ கவனித்துவந்தான்‌. ஒருமுறை அவன்‌, ஆசனத்தில்‌ அமர்ந்திருந்த பாபாவிடம்‌ சென்று, தான்‌ அதில்‌ உட்கார வேண்டியிருப்பதால்‌ பாபாவை எழுந்திருக்கும்படிக்‌ கூறினான்‌. பாபா உடனடியாக எழுந்திருந்து, தாம்‌ அமர்ந்திருந்த ஆசனத்தைக்‌ காலி செய்தார்‌. அதில்‌ அவன்‌ அமர்ந்துகொண்டான்‌. சிறிது நேரம்‌ அமர்ந்திருந்த பின்னர்‌ அவன்‌ எழுந்திருந்து, பாபாவை அமர்ந்துகொள்ளச்‌ சொன்னான்‌. பாபா ஆசனத்தில்‌ அமர்ந்தார்‌. பிறகு அவன்‌ பாபாவின்‌ பாதங்களில்‌ வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டுச்‌ சென்றுவிட்டான்‌.

தாம்‌ அதிகாரம்‌ செலுத்தப்பட்டதிலும்‌, வெளியேற்றப்பட்டதிலும்‌, பாபா எள்ளளவும்‌ வருத்தம்‌ அடையவில்லை. இந்த நானாவலி, பாபாவை மிகவும்‌ நேசித்தான்‌. பாபா மஹாசமாதி எய்திய பதிமூன்றாவது நாள்‌ தாமும்‌ சமாதி அடைந்தான்‌.

மிகவும்‌ எளிய வழி

முனிவர்களுடைய கதைகளைக்‌ கேட்பதும்‌, அவர்களின்‌ சத்சங்கத்தில்‌ இருப்பதும்‌. புறத்தில்‌ சாயிபாபா சாதாரண மனிதர்‌ போன்று நடித்தாலும்‌, அவரது செய்கைகள்‌ அவரது அசாதாரண புத்தி சாதுர்யத்தையும்‌, திறமையையும்‌ காண்பித்தன. அவர்‌ எதைச்‌ செய்தபோதிலும்‌ அவைகள்‌ அடியவர்களின்‌ நன்மை கருதியே செய்யப்பட்டன. தமது அடியவர்களுக்காக, சுவாச நியமத்தையோ, அல்லது எத்தகைய வழிபாட்டுமுறையையோ, அவர்‌ வகுத்துரைக்கவில்லை. அல்லது எவ்வித மந்திரத்தையும்‌, எவர்‌ காதிலும்‌ அவர்‌ ஓதவில்லை. எல்லாவித புத்திசாலித்தனத்தையும்‌ விட்டொழித்துவிட்டு எப்போதும்‌ ‘சாயி சாயி’ என்று ஞாபகமூட்டிக்கொள்ளும்படி அவர்களிடம்‌ கூறினார்‌. இதைச்‌ செய்வீர்களானால்‌ உங்களது கட்டுக்களெல்லாம்‌ விடுபட்டு விடுதலை அடைவீர்கள்‌ என்று உரைத்தார்‌. ஐந்து நெருப்புக்களிடையே அமர்தலும்‌, யாகங்களும்‌, பாராயணங்களும்‌, அஷ்டாங்க யோகங்களும்‌ அந்தணர்களால்‌ மட்டுமே இயலுவதாகும்‌. மற்றைய வகுப்பினருக்கு அவைகளால்‌ எவ்விதப்‌ பலனும்‌ இல்லை. மனதின்‌ தொழில்‌, நினைப்பதாகும்‌. எண்ணமின்றி அது ஒரு நிமிடமும்‌ இருக்கமுடியாது. புலன்‌ உணர்விற்குச்‌ சார்பான பொருளை அதற்கு நீங்கள்‌ அளித்தால்‌ அதைப்பற்றி நினைக்கும்‌. அதற்கு குருவை அளித்தால்‌ அது குருவைப்‌ பற்றி எண்ணமிடும்‌.

நீங்கள்‌ மிக்க கவனத்துடன்‌ சாயியின்‌ பெருமையையும்‌, பேராற்றலையும்‌ கேட்டீர்கள்‌. இதுவே சாயியை இயற்கையாக நினைவூட்டிக்கொள்ளுதலும்‌, வழிபடுவதும்‌, கீர்த்தனை செய்வதும்‌ ஆகும்‌. மேலே கூறப்பட்ட மற்ற சாதனைகளைப்போன்று இக்கதைகளைக்‌ கேட்பது என்பது அவ்வளவு கடினமானது அல்ல. இக்கதைகள்‌‌‌ சம்சாரமென்னும்‌ (உலக வாழ்க்கை) பயத்தை அழித்து, உங்களை ஆத்மிகப்‌ பாதையில்‌ அழைத்துச்‌ செல்கின்றன. எனவே இக்கதைகளைக்‌ கவனத்துடன்‌ கேளுங்கள்‌. அவைகளைத்‌ தியானியுங்கள்‌. அவைகளை ஜீரணித்துக்கொள்ளுங்கள்‌. இம்முறை பின்பற்றப்பட்டால்‌ அந்தணர்கள்‌ மட்டுமன்று பெண்ணினமும்‌, கீழ்க்குலத்தோரும்‌ தூய்மை அடைந்து புனிதமடைவர்‌.

நீங்கள்‌ உங்களது உலகக்‌ கடமைகளைச்‌ செய்துகொண்டோ, கவனித்துக்கொண்டோ இருக்கலாம்‌. ஆனால்‌ உங்களது மனத்தை சாயிக்கும்‌ அவரின்‌ கதைகளுக்கும்‌ அளித்துவிடுங்கள்‌. பின்னர்‌ அவர்‌ உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும்‌. இதுவே மிகவும்‌ எளிமையான வழியாகும்‌. எனினும்‌ அனைவரும்‌ ஏன்‌ அதைப்‌ பின்பற்றவில்லை? காரணம்‌ என்னவென்றால்‌ கடவுள்‌ அருளின்றி முனிவர்களின்‌ கதைகளைக்‌ கேட்கும்‌ ஆர்வம்‌ நமக்கு வருவதில்லை. கடவுள்‌ அருளால்‌ எல்லாம்‌ தட்டுத்தடங்கல்களின்றியும்‌, எளிதாகவும்‌ நடந்தேறுகிறது.

முனிவர்களின்‌ கதைகளைக்‌ கேட்பது என்பது ஒரு வழியில்‌ அவர்களின்‌ சத்சங்கத்தைப்‌ பெறுதலை நிகர்ப்பதாகும்‌. முனிவர்களின்‌ கூட்டுறவின்‌ முக்கியத்துவமானது மிகவும்‌ பெரியது. நமது உடல்‌ உணர்வையும்‌, அஹங்காரத்தையும்‌ அகற்றி பிறப்பு – இறப்பு என்னும்‌ சங்கிலித்‌ தொடர்ச்சியை அறவே அழிக்கிறது. இதய முடிச்சுக்களையெல்லாம்‌ துண்டாக அறுத்துவிட்டு தூய உணர்வான கடவுளிடத்திலேயே நம்மை அழைத்துச்‌ செல்கிறது. புலன்‌ உணர்வு விஷயங்களைப்‌ பற்றி நமது அவாவின்மையை நிச்சயம்‌ அதிகரித்து, இன்ப – துன்பங்களை நாம்‌ முழுவதும்‌ லட்சியம்‌ செய்யாதவாறாக்கி, ஆத்மிகப்‌ பாதையில்‌ மென்மேலும்‌ நம்மை அழைத்துச்‌ செல்கிறது. நாமஸ்மரணம்‌, வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள்‌ உங்களிடம்‌ இல்லையாயினும்‌, ஞானிகளிடம்‌ உங்கள்‌ முழு இதயத்தோடு சரணாகதியடைவீர்களானால்‌, இவ்வுலக வாழ்வெனும்‌ பெருங்கடலுக்கு அப்பால்‌ அவர்கள்‌ நம்மை பத்திரமாக இட்டுச்‌ செல்வார்கள்‌. இக்காரணத்துக்காகவே முனிவர்கள்‌ உலகில்‌ அவதரிக்கிறார்கள்‌. உலகத்தின்‌ பாவங்களை அடித்துச்‌ செல்லும்‌ கங்கை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி முதலிய புனிதஆறுகள்‌ கூட முனிவர்கள்‌, ஸ்நானத்திற்காகத்‌ தங்களிடம்‌ வரவேண்டுமென்றும்‌, தங்களைப்‌ புனிதப்படுத்த வேண்டுமென்றும்‌ விரும்புகின்றன. முனிவரின்‌ பேராற்றல்‌ அத்தகையது. முந்தைய பிறவிகளில்‌ நாம்‌ செய்த நற்கருமங்களின்‌ சேமிப்புக்‌ குவியல்களால்‌ நாம்‌ சாயிபாபாவினுடைய திருவடிகளை அடையப்‌ பெற்றோம்‌. சாயியின்‌ ரூப தியானத்துடன்‌, இந்த அத்தியாயத்தை நாம்‌ முடிக்கிறோம்‌.

அத்தகைய சுந்தரமான அழகுபடைத்த சாயி, மசூதியின்‌ விளிம்பில்‌ நின்றுகொண்டு ‘உதி’யை ஒவ்வொரு பக்தருக்கும்‌, அவரவர்‌ நன்மையைக்‌ கருத்திற்கொண்டு விநியோகித்துக்‌ கொண்டிருக்கிறார்‌. இவ்வுலகை வெறுமையாய்க்‌ கருதி பரமானந்தத்திலேயே எப்போதும்‌ திளைத்துக்கொண்டிருக்கும்‌ அவர்‌ முன்னால்‌ வீழ்ந்து வணங்குகிறோம்‌.

ஸ்ரீ சாய் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *