விரைவு உணவு ! சிறுகதை கவிஞர் மா.கணேஷ்
தம்பி சரவணா இன்னும் தூங்கிட்டே இருக்கியா. பொழுது விடிந்து எவ்வளவு நேரமாச்சு. உனக்கு ஆபீசுக்கு நேரமாகல. என்னம்மா இன்னம் கொஞ்சம் நேரம் தூங்கலாம்னா இப்படி பன்னுரியே. சரி எந்திருச்சு வா காபி இருக்கு குடித்துவிட்டு குளிக்க போ ம்ம் சரிம்மா.
அம்மா என்னடா எங்கம்மா என் வாட்ச் காணம். அங்க பாரு டீவிகிட்ட இருக்கு. இவனுக்கு வேர வேலையில்ல நைட்டெல்லாம் போனை பார்த்துகிட்டே லேட்டா தூங்குறது. காலையில்ல லேட்டா எந்திருச்சு அத காணம் இத காணம்னு தேடவேண்டியது. அம்மா நான் கிளம்புறேன். ஏய் இரு சூடா இட்லி இருக்கு சாப்பிட்டு போ. இல்லம்மா மணியாச்சு நான் வழியில பார்த்துக்கிறேன். என்னம்மோ போ நீ செய்றது ஒன்னும் எனக்கு நல்லதா படல. வெளியில் சாப்பிடுவது எங்க போயி விடுமோ.
அண்ணா வணக்கம் வாங்க தம்பி என்ன வழக்கம் போல் இன்னைக்கும் நம்ம பாஸ்ட் புட் தான ஆமாம் அண்ணே. சரி சொல்லுங்க என்னா வேனும் ஒரு நூடல்ஸ் அப்பறம் இரண்டு பஜ்ஜி ஒரு வடை. இந்தாங்க உட்கார்ந்து சாப்பிடுங்க. இல்லண்ணா அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்ல. நான் நின்னுகிட்டே சாப்பிட்டு கிளம்புறேன். சரிப்பா அண்ணா என்னப்பா இதை கணக்குல வச்சுக்கிங்க மதியம் சாப்பிட வரையில தாறேன் ம்ம் சரிப்பா.
அண்ணா என்னப்பா மறந்துட்டேன் இரண்டு சிகரெட் இதையும் சேர்த்துக்கிங்க ம்ம். அப்ப நான் வாரேண்ணா.. என்னா சரவணா வழக்கம் போல் இன்னைக்கும் லேட்டா ஆமா சுரேஷ் சரி வா போய் வேலையை பார்ப்போம்... சரி நான் சாப்பிட்டு வந்துறேன். அண்ணா வா சரவணா இப்ப என்னா வேணும். ஒரு எக் ரைஸ் ஒரு ஆம்லேட் ஒரு ஆஃப் பாயில் சரி தம்பி. இந்தாங்கண்ணா காசு காலையில் இருந்த பில்லுக்கும் சேர்த்து எடுத்துக்குங்க அப்படியே இப்ப இரண்டு சிகரெட் கொடுங்க. சரி நான் வாறேண்ணா சரிப்பா... அம்மா அம்மா ஏன் சத்தம் போடுற. இந்தா வாறேன் வந்து தானே கதவு திறக்க முடியும். சரி குளிச்சுட்டு வா காபி தாறேன் வேண்டாம் நான் வழியில்லே சாப்பிட்டேன். அப்ப நான் எதுக்கு இதையெல்லாம் சமைக்கனும். நீ ஒன்னும் சரியா வரமாட்ட .
போன் பன்னி நாளைக்கு ஆபீசுக்கு லீவு சொல்லிரு ஏம்மா. ஏன்னா நாளைக்கு உங்க மாமா மகளை பொண்ணு பார்க்க போகனும். ஏன்னா அப்பவாது நீ ஒழுங்கா சாப்பாட்டை வீட்டில் சாப்பிடுரியானு பார்ப்போம். எனக்கும் வயசாயிருச்சு ஒரு துணை வீட்டில் இருந்தா தான் நல்லாருக்கும்.
உங்க மாமாவும் எப்ப கல்யாணம் உன் மகனுக்கு பன்ன போரைனு கேட்டுகிட்டே இருக்காரு... வாங்க வாங்க எல்லாரும் வாங்க. வாம்மா வணக்கம் அண்ணே. வாங்க மாப்பிள்ளை வணக்கம் மாமா. எல்லாரும் முதல்ல உட்காருங்க. என்ன மாப்பிள்ளை நல்லா இருக்கிங்களா. ம்ம் நல்லாருக்கேன் மாமா. சரி பொண்ணு வரச்சொல்லுங்க. ஏம்மா என்னங்க அப்படியே பொண்ணுகிட்டே காபியை கொடுத்து விடுங்க எல்லாருக்கும் கொடுக்கட்டும்.. என்ன மாப்பிள்ளை நானும் வந்ததில் இருந்து பார்க்கிறேன். கையை பிடித்துகொண்டே இருக்கிங்க. ஒன்னும் இல்ல மாமா நைட்டுல இருந்து கை வலிக்குது. வேணும்ணா டாக்டர் கிட்ட போவோம்மா. இல்ல வேண்டாம் மாமா . அம்மா என்னா சரவணா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு. என்னடா சொல்லுற. என்னம்மா மாப்பிள்ளை உன்கிட்ட என்னமோ இரகசியம் சொல்லுறாரு. ஒன்னும் இல்லண்ணா. எதுவா இருந்தாலும் சும்மா சொல்லுங்க மாப்பிள்ளை. நான் உன் தாய் மாமன் தான் வேணுங்கிறத கேளுங்க எனக்கு ஒரு பொண்ணு எல்லாம் அவளுக்கு தான் அதலெல்லாம் ஒன்னும் இல்ல மாமா. அப்ப என்ன மாப்பிள்ளை எனக்கு இப்ப ரொம்ப நெஞ்சு வலிக்குது மாமா. ஏய் வண்டியை எடுடா மாப்பிள்ளையை தூக்கு ஆஸ்பத்திரிக்கு...
டாக்டர் என்னாச்சு என் மாப்பிள்ளைக்கு. அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருக்கு என்னா சொல்லுறிங்க அவருக்கு இருபத்தி ஏழு வயசு தான் ஆகுது. சார் இங்க பாருங்க இப்ப இருக்க உணவு முறையில்ல எந்த ஒரு நோய்யும் எப்ப வேணாலும் யாருக்கும் வரலாம். இவருக்கு இப்ப வந்துருக்குன்னா அவரு எடுத்துகிட்ட உணவும் அவருடை பழக்க வழக்கம் தான் காரணம்... அண்ணே என் மகனுக்கு என்னாச்சு சொல்லுண்ணே. மாப்பிள்ளைக்கு ஹார்ட் அட்டாக்கம்மா. அய்யோ என் பிள்ளைக்கு தான இப்படி வரனும். அப்பவே அவனுகிட்ட சொன்னே வெளியில் சாப்பிடாதனு கேட்கலையேண்ணே. என்ன இன்னைக்கு இந்தநிலைமைக்கு கொண்டாந்து விட்டுடானே... சரிவிடுங்க சரியாகிடும்.
இனிமேல் என்னப்போல யாரும் பிள்ளைங்கள அவங்க போக்குக்கு வெளியில விரைவு உணவு உண்ண விடாதிங்க. உங்களையெல்லாம் கை எடுத்து கும்பிடுகிறேன்...
விரைவு உணவு……
நன்றி
கவிஞர் மா.கணேஷ்