சுவையான டல்கோனா காபி செய்முறை Delicious Talcona coffee ☕
டல்கோனா காஃபி செய்முறை 👇
தேவையான பொருட்கள் :
காபி பவுடர் : 2 ஸ்பூன்
சர்க்கரை : 2 ஸ்பூன்
சூடான தண்ணீர் : 2 ஸ்பூன்
1️⃣ காபி பவுடர் சர்க்கரை தண்ணீர் இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஸ்பூன் வைத்து 20 நிமிடங்கள் நன்றாக கிரீம் போல ஆகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
2️⃣ பின்பு இந்த கலவையை ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
3️⃣ பின்னர் ஒரு கண்ணாடிக் கிளாசில் பாதி அளவு பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.
4️⃣ அதன்மேல் நாம் தயாரித்து வைத்துள்ள காபி கலவையை ஸ்பூன் வைத்து சிறிது சிறிதாக எடுத்து போட வேண்டும்.
5️⃣ அவ்வளவுதான் டல்கோனா காபி ரெடி பின்பு ஸ்பூன் வைத்து கலக்கி குடிக்க வேண்டும் 😋
நன்றி….