ஆன்மிகம்தெய்வீக பாடல்

புரட்டாசி பிறந்தாச்சு! கவிஞர் மா.கணேஷ்

🙏🏻புரட்டாசியின் நாயகன் எங்கள் பெருமாளே..!
🙏🏻உந்தன் புகழ்பாட புவியில் நாங்கள் பிறந்தோமே…!
🙏🏻ஆனந்த சயனத்தில் என்றும் இருப்பவனே…!
🙏🏻ஆனந்த வாழ்வை என்றும் தருபவனே..!
🙏🏻அலைமகளை அகத்தில் என்றும் கொண்டவனே..!
🙏🏻அந்த ஆதிசேசன் உடலில் என்றும் கிடப்பவனே…!
🙏🏻திருக்கோட்டியூர் நம்பிக்கு திருப்பம் தந்தவனே…!
🙏🏻திருமலை திருப்பதிக்கு உன்னை காண நாங்களும் வந்தோமே…!
🙏🏻கோவிந்தா என்றால் கோடி நன்மைகள் தருபவனே…!
🙏🏻கோகுலத்தில் கண்ணணாய் என்றும் இருப்பவனே…!
🙏🏻திருப்பாற்க்கடலில் திருமகளுடன் வாசம் செய்பவனே…!
🙏🏻திருப்பள்ளி எழுச்சி பாடி உன் துயில் நீக்க வந்தோமே…!
🙏🏻அன்று ஆழ்வார்கள் உந்தன் புகழ்பாடினாரே…!
🙏🏻இன்று அடியேனும் உந்தன் புகழ்பாடினனே..!

நன்றி 
கவிஞர் மா.கணேஷ் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *