இராமேஸ்வரம் தல வரலாறு பாகம் 1
இராமேஸ்வரம் – முகவுரை
இராமாயண கால வரலாற்றோடு தொடர்புடைய ராமேஸ்வரம் இந்திய ஒருமைப்பாட்டின் உறைவிடமாக திகழ்கிறது.
நம் நாட்டில் உள்ள புனித சேஷத்திரங்கள் நான்கில் வடக்கே மூன்றும் தெற்கே ஒன்றுமாக அமைந்துள்ளதோடு ராமேஸ்வரம் மட்டுமே சிவன் தளமாக அமைய பெற்றது .அதுபோல 12 ஜோதிர் லிங்கங்களும் இத்திருத்தலமும் ஒன்றாக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புடைய இராமேஸ்வரம் மூர்த்தி ,தீர்த்தம்,ஸ்தலம் ஆகிய மூப்பெருமையும் உடைய புண்ணிய பூமியாகும்.
இந்துக்களை பொறுத்தமட்டில் இறைவனை தரிசிக்க “தலயாத்திரை” மேற்கொள்வது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பகுதி ஆகும் அலையோசையுடன் கூடிய ஆழமான கடலில் அதன் அருகிலுள்ள தீர்த்தங்களும் மிகவும் புனிதமானவையாக கருதப்படுவதுடன் அவைகள் இன்றும் வணங்கப்படுகின்றன. அதேபோன்று காசியிலுள்ள கங்கையும், ராமேஸ்வரத்தில் உள்ள சேதுவும் மிகவும் புனிதமானவையாக விளங்குகின்றன. காசியிலிருந்து தொடங்கப்படும் யாத்திரை ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி ராமநாதசுவாமியை தரிசித்த பிறகே நிறைவு பெறுகிறது.
காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி முடியவும், கல்கத்தா முதல் பாம்பை வரை உள்ள மக்கள் தினசரி ஆயிரக்கணக்கில் இந்த புனித தலத்திற்கு வருகை தருவது மூலம் இத்தலமானது தேசிய ஒருமைப்பாட்டின் உயர்வுக்கு வழி வகுக்கிறது .
இத்தலமானது திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் மற்றும் தாயுமானசுவாமிகள் ஆகிய நான்கு பெரிய தமிழ் ஞானிகளால் பாடப் பெற்ற சிறப்பையும் பெற்றது.
இராமேஸ்வரம் தல வரலாறு பாகம் 2 இங்கே கிளிக் செய்யவும்