கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கல் எறிந்தால் ஓடும் நாய்
கொட்டும் தேனீ
தேனீயாய் இரு !

நல்லவரா ? கெட்டவரா ?
புரிந்து கொள்ள முடியவில்லை
சிலரை !

மீட்டாமல்
தராது இசை
வீணை !

இதழில் வைத்து காற்று நல்கிட
தந்தது இசை
புல்லாங்குழல் !

தமிழர்களின்
விலங்காபிமானம்
மாட்டு பொங்கல் !

முடக்க நினைத்தோர்
முடங்கினர்
சல்லிக்கட்டு !

நீதி நேர்மை நியாயம்
முன்மொழிந்து திரைப்படம்
கட்டணம் மூன்று மடங்கு !

பெருகிது மூடர் கூட்டம்
நடிகரின் உருவத்திற்கு
பால் !

இருக்கைக்கான சண்டையில்
கத்திக் குத்து
திரைப்பட ரசிகர்கள் !

படம் பார்க்க பணம் கேட்டு
அப்பாவை கொல்ல முயற்சி
திரைப்பட வெறியன் !

எங்கும் நடக்காதவை
இங்கு நடக்கின்றன
தலைகுனிவு தமிழகத்திற்கு !

பெருகியது அரசு வருமானம்
குடிமகன்களின்
கொண்டாட்டத்தால் !

மாணவனும் குடிக்கிறான்
மற்றவனும் குடிக்கிறான்
தள்ளாடும் தமிழகம் !

சீர் இளமை மிக்கவன்
சீரழிந்து நிற்கிறான்
மதுக்கடையால் !

குற்றங்கள் பெருகிட
காரணியானது
மதுக்கடை !

தமிழகம் மூழ்கும்முன்
மூடி விடுங்கள்
மதுக்கடை !

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *