ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ
மூளை மரணம்
பயன்பட்டது பலருக்கு
உடல் தானம்
இருவருக்கு விழியானான்
இறந்தவன்
விழி தானம்
உணர்த்தியது
நிரந்தரமற்றது அழகு
வானவில்
இனிது இனிது
தமிழில் இனிது
அவள் பெயர்
விஞ்ஞானிகளின் ராக்கெட்டை
வென்றது சிவகாசிச்
சிறுவனின் ராக்கெட்
விலைவாசி ஏற்றம்
ஊதியத்தில் இல்லை மாற்றம்
வேதனையில் தனியார் பணியாளர்கள்
ஆயிரம் பேரிலும்
தனியாகத் தெரிந்தது
அவள் விழிகள்
விலை மதிப்பற்றது
விவேகமானது
அன்பு
மலரும் நினைவு
வளரும் கனவு
அவள் முகம்
நன்றி கவிஞர் இரா.இரவி