கவிதைகள்வாழ்வியல்

ஓடும் இரத்தம் கூடும் இரத்தமானது ! கவிஞர் இரா .இரவி !

ஓடும் இரத்தம் கூடும் இரத்தமானது

தன் உடலில் ஓடும் இரத்தம்
தானம் தந்ததால் கூடும் இரத்தமானது !

உயிர் காத்து உதவும் இரத்தமானது !
உதவியதால் கூடும் இரத்தமானது !

கொடுத்திடக் கூடும் இரத்தமானது !
கூடிட நண்பர்கள் கூடிட காரணமானது !

கொடுத்தால் குறையும் செல்வமன்று இரத்தம் !
கொடுத்தால் கூடும் கல்வி போன்றது இரத்தம் !

வழங்கிட ஊறும் இரத்தமானது !
வாழ்நாளை நீட்டிக்கும் ஆற்றல் உண்டு !

வயது வேறுபாடு இன்றி தேவை இரத்தம் !
வளமும் நலமும் தரும் இரத்ததானம் !

கர்ணனை நினைவூட்டும் காரணியானது !
கேட்காமலே கொடுக்கும் உள்ளம் தந்தது !

சாதிமத வேற்றுமைகள் தகர்த்தது !
சகோதரத்துவம் மனதில் விதைத்தது !

நான் என்ற கந்தை அகற்றியது !
நாம் என்ற அன்பை உணர்த்தியது !

கொடுத்து சிவந்த கரம் என்பர் !
கொடுப்பதே சிவப்பு நிற இரத்தம் !

பலர் இன்று உயிர் வாழ்வது !
சிலர் தந்த இரத்த தானத்தால் !

பல நேரங்களில் உயிர் காத்தது !
பண்பாளர்கள் தானம் தந்த இரத்தம் !

இரத்தம் கிடைக்காததால் மரணித்தோர் உண்டு !
இரத்தம் கிடைத்ததால் பிழைத்தோர் உண்டு !

உயிர் காக்கும் உன்னதம் இரத்தம் !
உலகம் போற்றும் தானம் இரத்ததானம் !

பயமின்றி வழங்கலாம் இரத்ததானம் !
பாதுகாப்பானது கவலையின்றி வழங்கலாம் !

மனிதம் காக்கும் இரத்ததானம் !
மனிதநேயம் மலர்விக்கும் இரத்ததானம் !

உதவிடும் உள்ளம் தருவது இரத்ததானம் !
ஊரின் ஒற்றுமை வளர்ப்பது இரத்ததானம் !

யாருக்கும் போகும் என்பது தெரியாது !
யாருக்காவது உறுதியாகப் போகும் !

பெற்றவர் மனதார வாழ்த்துவார் !
பெருங்கவலை விடுத்து வாழ்வார் !

சண்டையிட்டு இரத்தம் சிந்துவது விடுத்து !
சந்தோசமாக தந்து மகிழ்வோம் இரத்தம் !

மனிதனுக்கு இயற்கை தந்த கொடை இரத்தம் !
மனிதனுக்கு மனிதன் கொடை தருவோம் இரத்தம் !

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *