என் முதல் கனவு! கவிஞர் இரா. இரவி
என் முதல் கனவு
மேல்நிலை இரண்டாம் ஆண்டில் பள்ளியில்
முதல் மதிப்பெண் எடுத்து இருந்தேன் !
தணிக்கைப் பாடத்தில் இருநூற்றிற்கு
நூற்றி எண்பது எடுத்து இருந்தேன் !
கணக்குப்பதிவியலில் இருநூற்றிற்கு
நூற்றி எண்பது எடுத்து இருந்தேன் !
வணிகவியல் பட்டம் பயின்று பின்
வளமான தணிக்கையராவது கனவாக இருந்தது !
குடும்ப சூழ்நிலையின் காரணமாக எனக்கு
கல்லூரி வாழ்க்கை இல்லாமல் போனது !
வேலைக்குச் செல்லும் நிலைமை வந்தது
வணிகவியில் அஞ்சல் வழியில் பயின்றேன் !
கல்லூரி வாழ்க்கை இல்லாமல் போன
கவலை நெஞ்சின் ஓரத்தில் இருந்தது !
வடுவாக இருந்திட்டக் கவலை நீங்கிட
வாய்ப்பாக என் ஹைக்கூ பாடமானது !
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் !
பாடநூலில் ஹைக்கூ இடம் பெற்றன
பாதித்த மனதிற்கு ஆறுதலாக அமைந்தது !
வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரியிலும்
வைகைஓரத்து தியாகராசர் கல்லூரியிலும் !
திருச்சி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியிலும்
தரமான ஹைக்கூக்கள் இடம் பெற்றன !
எனது மகன் பிரபாகரனுக்கு பாடநூலில்
என் ஹைக்கூ மனப்பாடப் பகுதியில் வந்தது !
தணிக்கையர் ஆகும் கனவு தகர்ந்திட்ட போதும்
தன்னிகரில்லாப் பெருமைகள் வந்து சேர்ந்தன!
கவிமலர் டாட் காம் இணையம் தொடங்கினேன்
கவிதை ரசிகர்கள் பலரும் வரவேற்றனர்!
நன்றி கவிஞர் இரா.இரவி