மேஸ்ட்ரோ இளையராஜா வாழ்க பல்லாண்டு ! கவிஞர் இரா .இரவி !
மேஸ்ட்ரோ இளையராஜா வாழ்க பல்லாண்டு
இசைஞானியே ! இசையின் தோணியே !
இளையராஜாவே ! இன்னிசை ரோஜாவே !
அன்னக்கிளியில் ஆரம்பமானது இசைப் பயணம் !
ஆங்கில நாட்டில் சிம்பொனியாய் மிளிர்ந்தது !
கிராமியப் பாடல்களுக்கு வாழ்வளித்த வல்லவரே !
கிராமத்தில் பிறந்து உயர்ந்த நல்லவரே !
பட்டி தொட்டி எல்லாம் கிராமியப் பாடல்கள் !
பாமரரை எல்லாம் ஈர்த்திடும் பாடல்கள் !
மேட்டுக் குடியினருக்கே சொந்தமென்ற இசையை !
மண் குடிசைக்கும் சொந்தமாக்கி மகிழ்வித்தாய் !
புரியாத இந்தி இசையை தமிழ்நாடு விட்டு விரட்டினாய் !
புரிந்த தமிழ்ப் பாடலால் சரித்திரம் படைத்தாய் !
தங்கத் தமிழில் ஒலித்திட்டாயே பாடல்கள் யாவும் !
தரணியே போற்றித் தகும் வண்ணம் செய்தாய் !
நடிகருக்காக ஓடிய படங்களின் தன்மையை !
நயம் தரும் இசைக்காக ஓட வைத்தாய் !
புலிக்குப் பிறந்தது பூனையாகாது உண்மை !
உந்தன் வாரிசுகள் நிருபித்தனர் நன்மை !
தமிழக மக்களை மட்டுமன்றி உலகத் தமிழர்களை
தரமான பாடல்களால் உள்ளம் கொள்ளைக் கொண்டாய் !
உலகம் உள்ளவரை தமிழ் மொழி இருக்கும் !
தமிழ் மொழி உள்ளவரை உன் பாடல் நிலைக்கும்.
நன்றி கவிஞர் இரா.இரவி