நகைச்சுவை ! கவிஞர் இரா .இரவி !
நகைச்சுவை
வியாபாரி குல்லாவை
எறிந்தும் எறியவில்லை
நவீன குரங்குகள் !
காகம் பாடியது
கா கா என்று
வடையை காலில் வைத்து !
எட்டவில்லை என்றதும்
புளிக்கும் எனவில்லை
பழுக்கட்டும் என்றது நரி !
கிடைக்கவில்லை இந்த மருந்து
என் கையெழுத்து என்றார்
மருத்துவர் !
பானையில் கற்கள் போடவில்லை
உறிஞ்சியது குழல் வைத்து
கணினியுகத்தின் காகம் !
கிணற்றில் முகம் பார்த்து
குதிக்கவில்லை விரட்டியது நரியை
புத்தி மிக்க சிங்கம் !
கீழே குதித்தவன்
விழுந்தான் பல்லி மீது
பல்லி ?
எல்லோருக்கும் எதிர்காலம்
சொல்லியும் அறியவில்லை
அதன் எதிர்காலம் கிளி !
மறந்துவிட்டது
சிறகுகள் இருப்பதை
சோதிடக் கிளி !
சாப்பிட வந்தவர் மூளை இருக்கா ?
எல்லோருக்கும் இருந்தது
உங்களுக்குத்தான் இல்லை !
சாப்பிட்டவர் சொன்னார்
சுவையான முருங்கைக்காய்
காதிலிருந்து தவறிய பென்சில் !