தந்தை பெரியார் ! கவிஞர் இரா .இரவி !
அறியாமை இருள் அகற்றிய அறிவுச்சூரியன் !
அறிந்ததை அகிலத்திற்கு உரக்கச் சொன்னவர் !
எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ?
என்று கேட்டிடத் துணிவை தந்தவர் !
ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் !
அனைவரும் சமம் அறிவிப்புச் செய்தவர் !
பிறப்பினில் பேதம் கற்ப்பிப்பது மடமை என்றவர் !
பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்றவர் !
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்றார் !
கடவுள் கற்ப்பிக்கப்பட்ட கற்பனை என்றவர் !
சொல்வது யாராக இருந்தாலும் சரி !
சொல்வது சரியா ? என ஆராயச் சொன்னவர் !
உலகப் பொதுமறைப் படைத்த திருவள்ளுவரின் !
ஒப்பற்ற திருக்குறளை வழி மொழிந்தவர் !
இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்திட வைத்தவர் !
எல்லோருக்கும் கல்வி பதவி கிடைத்திட வைத்தவர் !
மூட நம்பிக்கைகளை வெறுத்து ஒதுககியவர் !
மனதில் நம்பிக்கை விதைத்து மக்களை வளர்த்தவர் !
தன் மானம் இழந்து தமிழர் மானம் காத்தவர் !
தன் மனம் சொன்னதை அப்படியே சொன்னவர் !
சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக்காரர் !
சம்மட்டி அடி போல இடி போல முழங்கியவர் !
கடவுளை மற ! மனிதனை நினை !உணர்த்தியவர் !
கடவுளின் பெயரால் நடக்கும் அநீதியைக் கண்டித்தவர் !
சாதிக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் !
சகோதர உணர்வினை அனைவருக்கும் போதித்தவர் !
மூளையை சிந்திப்பதற்குப் பயன்படுத்தச் சொன்னவர் !
மூளைச்சலவைக்கு மயங்காதே என அறிவுறுத்தியவர் !
சாமியார்களின் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டியவர் !
சாமி யாருமில்லை என்று அதட்டி உரைத்தவர் !
பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர் !
பெண் போகப் பொருள் அல்ல விளக்கியவர் !
பெண்ணை மதிக்க ஆண்களுக்கு இயம்பியவர் !
பெண் இனம் உயர்ந்திடக் காரணமானவர் !
பெண் கல்விக்கு நாட்டில் வழி வகுத்தவர் !
பெண்மை ஒளிர்ந்திட அறிவொளி ஏற்றியவர் !
தமிழகத்தில் பெரியார் பிறக்காது போயிருந்தால் !
தமிழகம் அறியாமை இருளிலேயே இருந்திருக்கும் !
தள்ளாத வயதிலும் தளராத தேனீ அவர் !
தாடிக்காரர் தமிழரின் நாடித் துடிப்பு அறிந்தவர் !
போராட்டம் அறிவித்தால் முதல் நபராய் நின்றவர் !
போராடியே பற்பல வெற்றிகள் கண்ட்வர் !
கொள்கை எதிரிகளும் மதிக்கும் மாண்பாளர் !
கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர் !
கடைசிவரை கறுப்புச் சட்டை அணிந்தவர் !
கருப்பு அறியாமை இருட்டை உணர்த்தியவர் !
பல்லாயிரம் ஆண்டு கால ஆதிக்கத்தை !
பரப்புரையால் ஆட்டம் காண வைத்தவர் !
புராணங்களைப் படித்துவிட்டு குறைகளைச் சொன்ன்னவர் !
புராண கட்டுக்கதைகளை நம்பாதீர் என்றவர் !
பிற்படுத்தப்பட்ட மக்களின் விடியல் விரும்பியவர் !
தாழ்த்தப்பட்ட மக்களின் தாழ்மை அகற்றியவர் !
வன்முறையில் என்றுமே விருப்பம் இல்லாதவர் !
நன் முறையில் அறிவுப் பிரச்சாரம் செய்தவர் !
பெரியார் அவர் ஒருவர் மட்டுமே பெரியார் !
பெரியாருக்கு முன் மற்ற யாவரும் சிறியார் !
தந்தை பெரியார் அவர் மட்டுமே பெரியார் !
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?
நன்றி கவிஞர் இரா.இரவி