நோபல் நாயகர் இரவீந்திரநாத் தாகூர் வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
நோபல் நாயகர் இரவீந்திரநாத் தாகூர் வாழ்க !
எட்டு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கி
எட்டாத உயரம் கவிதையால் அடைந்தவரே !
பாரிஸ்டர் பட்டம் நீங்கள் பெறவில்லை !
பெற்று இருந்தால் நோபலுக்கு வாய்ப்பில்லை !
நோபல் பணத்தால் உருவானது பல்கலைக் கழகம் !
நோபல் பரிசுக்குப் பெருமை பெற்றுத் தந்தவரே !
உலக நாடுகள் பல பயணித்த முதல் கவிஞரே !
உலகத்தை உற்று நோக்கி தந்த கவி தேனாறு !
பாடலாசிரியர் கவிஞர் ஓவியர் இதழாசிரியரே !
பன்முக ஆற்றலில் தனி முத்திரைப் பதித்தவரே !
காந்தியடிகளுக்கு தேசப்பிதா பட்டம் தந்தவரே !
காந்தியடிகள் விரும்பிய இலக்கிய வேந்தரே !
தன்னம்பிக்கையின் சின்னம் விவேகானந்தருடன்
தன்னலமற்ற நட்பு கொண்ட நல்லவரே !
வாலாபாக் படுகொலையைக் கண்டிக்கும் விதமாக
வழங்கிய சர் பட்டதை திருப்பி வழங்கியவரே !
நாட்டின் விடுதலைக்கு முன்பாகவே மறைந்திட்டாலும்
நாட்டின் விடுதலைக்குப் பின்பும் நினைக்கப்படுபவரே !
இந்தியா வங்காளம் இரண்டு நாட்டின் தேசிய கீதமானது
இனிய கவிதைகளுக்கு சாகாவரம் தந்தவரே !
அரசு விழாக்கள் அனைத்திலும் உமது பாடல் !
அரசும் மக்களும் நினைக்காத நாளே இல்லை !
தோன்றின் புகழோடு தோன்றுக வள்ளுவரின் வழி தோன்றி புகழ் பல பெற்றவரே வாழ்க பல்லாண்டு !
நன்றி கவிஞர் இரா.இரவி