கவிதைகள்வாழ்வியல்

தமிழ் மொழியின் முகவரிநம் தமிழ் எழுத்தா? கிரந்த எழுத்தா?கவிஞர் இரா .இரவி !

தமிழ்மொழியின் முகவரி நம் தமிழ் எழுத்தே ஆகும்
தமிழ்மொழியே முதலில் தோன்றிய முதன்மொழி !

இடையில் வந்தவை தான் இந்த கிரந்த எழுத்துக்கள்
என்றென்றும் நிலைத்து நிற்பது நம் தமிழ் எழுத்தே !

உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்து என்று
உயர்ந்த எழுத்துக்கள் உன்வசம் இருக்க கிரந்த எழுத்து எதற்கு?

தமிழர்களின் அடையாளம் முதல்மொழி தமிழ்மொழி
தமிழ்மொழியின் அடையாளம் தன்னிகரில்லா தமிழ் எழுத்துக்கள் !

ஒரு எழுத்தில் பொருள் உள்ள சொல் உண்டு
ஒருபோதும் தமிழுக்கு ஈடான மொழிகள் இல்லை !

அமெரிக்காவின் மொழி ஆய்வாளர்கள் உரைக்கும் உண்மை
அனைத்து மொழிகளின் தாய்மொழி நம் தமிழ்மொழி !

பல மொழிகள் பயின்ற பாவாணர் உரைத்தார் அன்றே
பண்டைத் தமிழே உலகின் தமிழ்மொழி என்றே !

கல்வெட்டுக்களில் வடிக்கப்பட்ட எழுத்து தமிழ் எழுத்து
கவிஞர்கள் வடித்திட்ட எழுத்து தமிழ் எழுத்து !

அகலாய்வு நடந்திட்ட இடங்களில் எல்லாம்
அற்புதத் தமிழ் எழுத்துக்களே, எங்கும் கிடைத்தன !

மெய் எழுத்துக்களில் புள்ளி இல்லாமல் இருந்தன அன்று
மெய் எழுத்துக்கள் புள்ளியோடு அழகாகின இன்று !

வடமொழி வருவதற்கு முன்னே தோன்றிய மொழி
வண்டமிழ் மொழியே உலகின் முதல்மொழி.

நன்றி
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *