கவிதைகள்வாழ்வியல்

வறுமை கொடிது ! கவிஞர் இரா .இரவி

கொடிது ! கொடிது !
வறுமை கொடிது !
கம்புகளின் மேல் கயிறு !
கயிற்றின் மேல் கால்கள் !
தலையில் செம்புகள் !
கைகளில் கம்பு !
அடி மேல் அடி வைக்கும் போது
அடிதவறினால் அடி படும் !
இசைக்கு ஏற்றபடி
பிசகாமல் நடை !
நடு சாலையே
நாட்டிய அரங்கம் !
நடந்து செல்பவர்களே
பார்வையாளர்கள் !
பார்த்துச் செல்வார்கள்
கவனம் சிதறினால்
மரணம் !
ஜான் வயிற்றுக்கு
உயிரைப் பணயம்
வைத்து நடையும் நடனமும் !
காசு போட குணம் இருக்காது 1
பணம் தர மனம் இருக்காது !
கல் நெஞ்சம் படைத்த
மனிதர்கள் ?

நன்றி
கவிஞர் இரா.இரவி 

One thought on “வறுமை கொடிது ! கவிஞர் இரா .இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *