கணவனை புரிந்துகொள்ளும் ஒரு மனைவி இருந்தால் .அவளும் அம்மா தான் கணவனுக்கு சிறுகதை !
கணவனை புரிந்துகொள்ளும் ஒரு மனைவி இருந்தால் .அவளும் அம்மா தான் கணவனுக்கு சிறுகதை
மனைவி ஒருநாள் தன்கணவனுக்குப்
பிடித்த மீன்குழம்பு சமைத்தாள்.

இன்று எப்படியும் பாராட்டு வாங்கவேண்டும் என்று காத்திருந்தாள்.
தெருமுழுதும் மீன்குழம்பு வாசனை.
கணவன் வந்ததும் வேகமாக சாப்பிட
அமரச் சொன்னாள்,
மனைவி சாப்பாடு பரிமாறினாள்.
” என்னங்க குழம்பு எப்படி இருக்கு?
” நல்லா இருக்கு ஆனாலும் எங்கம்மா கைப்பக்குவம் உனக்கு இல்ல…. ….
எங்கம்மா வைப்பாங்க பாரு மீன்குழம்பு தெருவே மணக்கும்… அப்பப்பா…….ருசி
சூப்பரா இருக்கும்.
அம்மாகுழம்பின்ருசியைபாராட்டிகணவர்எழுந்தார்.
மனைவிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது
தன் கணவன் குழம்பின்ருசியை பாராட்டததை நினைத்து.
எப்பபாரு “அம்மா… அம்மான்னு அவரு அம்மாவைத்தான் தூக்கிவச்சு பேசுவாரு என்று முணுமுணுத்தாள்.

அப்போது அவளுடைய மகன் சாப்பிடவந்தான். மகன் ஒரு வாய்சாப்பிட்டுவிட்டு அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான்.
அம்மா”சூப்பர்மா” எப்படிம்மா இப்படிசமைக்கறீங்க? தெருவேமணக்குது.
உங்க அளவுக்கு யாராலயும் மீன்குழம்பு வைக்க முடியாதும்மா” என பாராட்டினான்.
அவளுக்குப்புரிந்தது… ஒரு மகன்யார்கையில் சாப்பிட்டாலும் தன் தாயின் சமையலைத்தான் அதிகம் பாராட்டுவான் என்று.
நம்மகனும் அம்மா.. அம்மாஎன்றுதானே
உயர்த்திப்பேசுகிறான். மகன் பேசுவது தவறில்லை என்றால் கணவன் பேசியதும் தவறில்லைதான். என்று புரிந்துகொண்டாள்.

புரிந்துகொள்ளும் ஒருமனைவி இருந்தால் அவளும் அம்மா தான் கணவனுக்கு.