தினம் ஒரு கோபுர தரிசனம் ! வீராட்டகாசம் !
இறைவர் திருப்பெயர்: வீராட்டகாசர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்: திருமால், சித்தர்கள், கொங்கணமுனிவர்.
தல வரலாறு
இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
சித்தர்கள் பலரும் இப்பெருமானை வழிபட்டு கிடைக்கரிய சித்திகளைப் பெற்றுள்ளனர்.
திருமால் இப்பெருமானைப் பூசித்து தனக்கு பவளநிறத்தினைப் பெற்றுக்கொண்டார்.
சங்கார காலத்தில் காலாக்னி ருத்ரர் நெற்றிக்கண் தீயினால் அனைத்தையும் அழித்தபோது, சிவபெருமான் ஆர்த்தெழுந்து வீரமாக பெருஞ்சிரிப்பு சிரித்தமையால் இத்தலம் வீராட்டகாசம் எனப்பட்டது.
சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபட்டது இத்தலத்து மூர்த்தம் என்று சொல்லப்படுகிறது. (இத்தலத்தில் சாக்கிய நாயனார் கையில் கல்லுடன் உள்ள திருமேனி உள்ளது.)
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் – பெரிய காஞ்சிபுரம் அப்பாராவ் முதலியார் தெருவில் சென்று இக்கோயிலை அடையலாம்
நன்றி