காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி
காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி
உனைப்பார்க்கும்
நான் மட்டுமல்ல
எல்லா ஆண்கள் மட்டுமல்ல
எல்லாப் பெண்களும்
வியந்துப் போகிறார்கள்
இவ்வளவு அழகா ? என்று !
உனக்கானக் காத்திருப்பு சுகம்தான்
வழி மேல் விழி வைத்து மட்டுமல்ல
வழி மேல் மனதையும் வைத்துக் காத்திருக்கிறேன் !
தாமதமாகும் நிமிடங்களில்
உன் மீது கோபம் வந்தாலும்
வந்த கோபம் நீ வந்ததும்
பறந்து விடுகின்றன !
ஒற்றை ரோஜா தந்தேன்
திரும்பி விட்டாய் !
வாங்க மறுக்கிறாயோ ?
என்று நினைத்தேன்
வைத்து விடுங்க !
என்றாய் !
வைத்து விட்ட பின் ரோஜா
என்னைப்பார்த்து விரல் ஆட்டியது !
விழிகள் சந்தித்து
இதயங்கள் இடம் மாறி
பரிசுப் பொருட்கள்
பரிமாறியது காதலின் தொடக்கம் !
இதழ்கள் வழி
உமிழ்நீர் பரிமாற்றம் காதலின் பரிணாமம் !
மாலை மாற்றத்திற்குப் பின்
உடல்கள் பரிமாற்றம் காதலின் உச்சம் !
ஓரக் கண்ணால்
ஒரே ஒரு பார்வைதான் பாவை பார்த்தால் !
என்னுள் பரவசம்
எண்ணிலடங்கா இன்பம் !
பார்வையின் சக்தி
பார்த்தவர்களுக்குதான் புரியும் !
கூர்ந்து பார்த்து
நங்கூரம் இட்டுச் சென்றாள் !
கப்பல் என நின்று விட்டேன்
நான் அதே இடத்தில !
நன்றி கவிஞர் இரா.இரவி