கவிதைகள்வாழ்வியல்

என் இனிய பகைவனுக்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

தீங்கு செய்வதாய் நினைத்து நீ செய்த 
தீங்கு எனக்கு தீங்கே அல்ல !

புதிய அனுபவத்தைக் கற்றுத்  தந்தது
புதிய மனிதர்களைச்  சந்திக்க முடிந்தது !

திறமை உள்ளவன் எங்கும் வெல்வான் 
திறமை உள்ளதால் வென்றேன் நான் !

முத்திரைப் பதித்தேன் கொண்ட கடமையில் 
மேடைகள் கண்டேன் பரிசுகள் வென்றேன் !

சென்ற இடமெங்கும் சிறப்புகள் பெற்றேன் 
சிந்தித்துப் பார்த்தேன் சிறிது மகிழ்ந்தேன் !

காணாத இடங்கள் கண்டு மகிழ்ந்தேன் 
கண்டதை முகநூலில் பகிர்ந்து மகிழ்ந்தேன் !

தெரியாதவற்றைத் தெரிந்துக் கொண்டேன் 
தெளிவான சிந்தனைக்கு நேரம் கண்டேன் !

வீழ்வேன் என்று நினைத்து   தீங்கு செய்தாய் 
வளமாக வாழ்வேன் என்று எண்ணவில்லை நீ! 

படைப்புகள் பல படைத்து  மகிழ்ந்தேன் 
பலரும் என்னைப் பாராட்டி மகிழ்ந்தனர் !

நான் உனக்கு செய்த உதவிகளை 
நீ நன்றி மறந்தாய் அது உன் இயல்பு !

நீ நெஞ்சில் குத்தி இருந்தால் மகிழ்ச்சி ஆனால் 
நீ முதுகில் குத்தியதுதான் வடுவானது !

பதிலுக்கு உனக்கு தீங்கு செய்ய நீ அல்ல நான் 
பதில் உனக்கு எனது வளர்ச்சியும் வெற்றியும் !

சூரியனின் சுடரை நீ சிறுபிள்ளைத்தனமாய் 
சிறு கைகளால் மறைந்திட நினைத்தாய் !

தீங்கையும் நன்மையாக்கி மகிழ்ந்தேன் 
தீங்கு செய்த என் இனிய பகைவனுக்கு நன்றி !

நன்றி
கவிஞர் இரா இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *