மனத்திற்கிட்ட கட்டளை ! கவிஞர் இரா. இரவி !
நாளும் நல்லதையே எப்போதும் நினைக்க வேண்டும் !
நான் என்ற அகந்தை வராதிருக்க வேண்டும் !
எல்லோரையும் அன்பாக மதிக்க வேண்டும்
யாருடனும் சண்டை செய்யாதிருக்க வேண்டும் !
பேராசை எப்போதும் வராதிருக்க வேண்டும்
பண்பில் சிறந்தவனாக வாழ்ந்திட வேண்டும் !
உண்மையை மட்டுமே பேசிட வேண்டும்
ஒருபோதும் பொய் பேசாதிருக்க வேண்டும் !
முடிந்தளவு பிறகுக்கு உதவிட வேண்டும்
முயற்சி மூச்சென நடைபெற்றிட வேண்டும் !
படைப்பில் சாதனைகள் நிகழ்த்திட வேண்டும்
படிப்போர் உள்ளம் கவர்ந்திட வேண்டும் !
இன்சொல்லே எப்போதும் பேசிட வேண்டும்
வன்சொல் எப்போதும் பேசாதிருந்திட வேண்டும் !
சினம் என்பதை அறியாதிருந்திட வேண்டும்
சிறுவர்களையும் மதித்து நடந்திட வேண்டும் !
தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்
தரணியில் வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும் !
இன்பத்திற்கு கூத்தாடாமல் இருந்திட வேண்டும்
துன்பத்திற்கு கவலை கொள்ளாதிருக்க வேண்டும் !
பொறாமைப்படாத நல் நெஞ்சம் வேண்டும்
பூத்திட்டப் பூவாக மலர்ந்த உள்ளம் வேண்டும் !
எண்ணம் சொல் செயல் சிறக்க வேண்டும்
எல்லோரும் பாராட்டும் நல்குணம் வேண்டும் !
பகையே இல்லாத நிலைமை வேண்டும்
பார்ப்பவர் உள்ளம் மலர்ந்திட வேண்டும் !
சமுதாயத்தைச் சீர்படுத்திட எழுதிட வேண்டும்
சமுதாயம் முழுவதும் சீராகிட வேண்டும் !
மனத்திற்கிட்ட கட்டளைகள் நிறைவேறிட வேண்டும்
மனம் போல நல்வாழ்வு நிலைத்திட வேண்டும் !
நன்றி கவிஞர் இரா . இரவி