கோரிக்கைகள் நியாயமாக இருப்பின் நிச்சயம் நிறைவேற்றும் பாபா…!வியாழன்
இறைவனிடம் நாம் அன்பு வைக்கும்போது, எள்முனை அளவு கூடசந்தேகம் இல்லாமல் வைக்க வேண்டும். அப்போது தான் அந்த பக்தி முழுமைப்பெறும். நம்முடைய கோரிக்கைகள் நியாயமாக இருப்பின், அதை தெய்வம் நிச்சயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.

பாபாவின் அன்புக்கு பாத்திரமான தாமோதரை எல்லாரும் செல்லமாக தாமுஅன்னா என்றே அழைப்பார்கள். பாபாவும் அவ்வாறே அழைத்தார். ஒரு தடவை கோவாவைச் சேர்ந்தராலே என்ற பணக்காரர் ஒரு பெரியபார்சலில் 300 மாம்பழங்களை சீரடிபாபாவுக்கு அனுப்பிவைத்தார். அதில் 8 நல்ல மாம்பழங்களை பாபா எடுத்து ”இந்த 8 மாம்பழங்களையும் நான் தாமுஅன்னாவுக்காக எடுத்து வைத்திருக்கிறேன். அவை இங்கேயே இருக்கட்டும்” என்றார்.
மசூதியில் இருந்த மற்றபக்தர்களுக்கு, பாபா ஏன்8 மாம்பழங்களை தாமோதருக்காக எடுத்து வைக்கிறார் என்ற உண்மை முதலில் தெரியவில்லை. தாமோதருக்கு மொத்தம் 3 மனைவிகள். அவர்களில் ஒருவருக்குக் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் தாமோதருக்கு நீண்டநாட்களாகவே இருந்து வந்தது. ஏராளமான ஜோதிடர்களிடம் அவர்தன் ஜாதகத்தை காட்டியும், ஜோதிடர்கள் அனைவரும் தாமோதரனின் ஜாதகத்தில் முக்கிய இடத்தில் பாவக்கிரகம் ஒன்று இருப்பதால் இந்த பிறவியில் குழந்தை பிறக்கவாய்ப்பேஇல்லை என்று கூறிவிட்டனர்.

இதனால் அவர் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்திருந்தாலும், ஒரு நம்பிக்கையுடன் பாபாதனக்குரு குழந்தையை அருளமாட்டாரா என்ற ஏக்கத்துடன் சீரடிக்கு வந்து கொண்டேஇருந்தார். தாமோதரின் உள்ளக்குமுறலை பாபா நன்கு அறிந்திருந்தார். தாமோதரனின் மனக்குறையை போக்க அவர் தக்கநேரத்துக்காககாத்திருந்தார். பாபா… சொன்னது போல சிறிது நேரத்தில் தாமோதர் மசூதிக்குள் ஏறிவந்தார். பாபா கணித்தது போலவே அவர்வந்துவிட்டாரே என்று மற்ற எல்லா பக்தர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.
தாமோதர் பாபாவின் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த பாபா, ”இந்தா பிடி 8 மாம்பழங்கள்” என்று கொடுத்தார். மகிழ்ச்சியோடு அந்த 8 மாம்பழங்களையும் தாமோதர் பெற்றுக்கொண்டார். அப்போது பாபா, தாமோதரனைப்பார்த்து, இந்த 8 மாம்பழங்கள் உனக்கு குழந்தைப்பாக்கியம் தரும் சக்தி கொண்டவை. எனவே இவற்றை கவனமாக எடுத்துச்செல். இந்த 8 மாம்பழங்களையும் நீசாப்பிடக்கூடாது.
உன் இளைய மனைவிக்குகொடு. அவள் இந்த மாம்பழங்களை சாப்பிட்டால் உன் விருப்பம் நிறைவேறும்” என்றார் . ஏனோ தெரியவில்லை, அந்த சமயத்தில் பாபா மீது தாமோதருக்கு நம்பிக்கை வரவில்லை. எல்லா ஜோதிடர்களும் தனக்கு குழந்தைப்பேறு இல்லை என்று சொல்லிவிட்ட நிலையில் இதை எப்படி உறுதியாக நம்புவது என்று யோசித்தார். அவர் பாபாவை பார்த்து கடவுளால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை கடவுளாலேயே மாற்ற முடியாது என்கிறார்கள். இப்போது கடவுள் இயற்கைக்குப் புறம்பான செயலைச் செய்வாரா? என்றார்.

உடனே பாபா” ஒருரோஜாச்செடியில் ஒரு கிளையில் சிவப்புரோஜாவும் மற்றொருகிளையில் வெள்ளைரோஜாவும் பூக்கமுடியுமா?” என்று கேள்விகேட்டார். அதற்கு என்ன சொல்வது என்று தாமோதரருக்குப் புரியவில்லை. அதை உணர்ந்த பாபா, ”நாளைக் காலையில் நான் உலாப் போகும் போது தோட்டத்துப்பக்கம் வா தாமோதர்” என்றார் .மறுநாள் பாபாவுடன் தோட்டத்திற்குச் சென்றார் தாமோதர்.
தோட்டத்தில் ஒரு ரோஜாச்செடியை தாமோதரருக்கு சாய்பாபா சுட்டிக்காட்டினார். அந்த ரோஜா செடியில் ஒரு சிவப்புரோஜாவும், பக்கத்திலேயே ஒரு வெள்ளை ரோஜாவும் பூத்திருந்தது. அதை கண்டதும் தாமோதரரருக்கு ஆச்சரியம்தாங்க முடியவில்லை. அப்படியே சாஷ்டாங்கமாக பாபாவின் கால்களில் அவர் விழுந்தார்.

”தாமோதர் இது என்னால் ஏற்படவில்லை. என் பக்தனின் சந்தேகம் தீர்க்க ஆண்டவனை வேண்டினேன். அதனால் இந்த அற்புதம் விளைந்தது” என்றார். அதன்பின் பாபா கொடுத்த 8 மாம்பழங்களையும் தாமோதர் பெற்றுச் சென்றார். அதில் துரதிர்ஷ்டவசமாக 4 மாம்பழங்கள் காணாமல் போய்விட்டன. அப்படி மாயமான 4 பழம் போக மீதமிருந்த 4 மாம்பழங்களைக் கொண்டு சென்று தாமோதர் தன் மனைவியிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். தாமோதர் மனைவிக்கு பாபாவின் அருளால் அடுத்தடுத்து எட்டுக்குழந்தைகள் பிறந்தன.
அவர்களில் 4 மாம்பழங்கள் மாயமானது போல 4 குழந்தைகள் இறந்து போய் விட்டனர். மற்ற 4 பேர்சவு பாக்கியங்களுடன் வாழ்ந்தனர். இப்படி தன்னை நம்பி நாடிவந்த அடியவர்கள் வாழ்வில் பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். உலகின் எந்த கோடியில் இருந்தாலும் அவரை நினைத்து விட்டால் நிச்சயம் அதற்கு பலன் உண்டு.
ஷீர்டி சாய் பாபா 108 போற்றி

ஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி!
ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:
ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
ஓம் சேஷ சாயினே நம:
ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
ஓம் பூதாவாஸாய நம:
ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
ஓம் காலாதீதாய நம:
ஓம் காலாய நம
ஓம் காலகாலாய நம:
ஓம் காலதர்பதமனாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் அமர்த்யாய நம:
ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
ஓம் ஜீவாதாராய நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:
ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம:
ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
ஓம் ருத்திஸித்திதாய நம:
ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
ஓம் யோக÷க்ஷமவஹாய நம:
ஓம் ஆபத்பாந்தவாய நம:
ஓம் மார்க்பந்தவே நம:
ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:
ஓம் ப்ரியாய நம:
ஓம் ப்ரீதிவர்தனாய நம:
ஓம் அந்தர்யாமினே நம:
ஓம் ஸச்சிதாத்மனே நம:
ஓம் ஆனந்தாய நம:
ஓம் ஆனந்ததாய நம:
ஓம் பரமேச்வராய நம:
ஓம் பரப்ரம்ஹணே நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் ஞானஸ்வரூபிணே நம:
ஓம் ஜகத பித்ரே நம:
ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
ஓம் பக்தாபயப்ரதாய நம:
ஓம் பக்த பாராதீனாய நம:
ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
ஓம் சரணாகதவத்ஸலாய நம:
ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
ஓம் ஞான வைராக்யதாய நம:
ஓம் ப்ரேமப்ரதாய நம:
ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
ஓம் கர்மத்வம்சினே நம:
ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
ஓம் குணாதீத குணாத்மனே நம:
ஓம் அனந்த கல்யாண குணாய நம:
ஓம் அமித பராக்ரமாய நம:
ஓம் ஜயினே நம:
ஓம் துர்தர்ஷா÷க்ஷõப்யாய நம:
ஓம் அபராஜிதாய நம:
ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
ஓம் அசக்யராஹிதாய நம:
ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
ஓம் ஸுருபஸுந்தராய நம:
ஓம் ஸுலோசனாய நம:
ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
ஓம் அரூபாவ்யக்தாய நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
ஓம் மனோவாக தீதாய நம:
ஓம் ப்ரேமமூர்த்தயே நம:
ஓம் ஸுலபதுர்லபாய நம:
ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
ஓம் ஸர்வ பாரப்ருதே நம:
ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:
ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
ஓம் தீர்த்தாய நம:
ஓம் வாஸுதேவாய நம:
ஓம் ஸதாம் கதயே நம:
ஓம் ஸத்பராயணாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் பாவனானகாய நம:
ஓம் அம்ருதாம்சவே நம:
ஓம் பாஸ்கரப்ரபாய நம:
ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
ஓம் ஸித்தேச்வராய நம:
ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
ஓம் யோகேச்வராய நம:
ஓம் பகவதே நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸத்புருஷாய நம:
ஓம் புரு÷ஷாத்தமாய நம:
ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:
ஓம் வேங்கடேசரமணாய நம:
ஓம் அத்புதானந்தசர்யாய நம:
ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
ஓம் ஸர்வமங்களகராய நம:
ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:
மங்களம் மங்களம் மங்களம் !
ஸ்ரீ சாயி சத்சரித்திரம் தமிழ். (அத்தியாயம் – 1).



