ஆன்மிகம்கோவில்தெய்வீக குறிப்புகள்தெய்வீக பாடல்

மர்மம் விலகாத கோவில்கள் ? Part-2 தஞ்சை பெரிய கோவில் ( Tanjore Peruvadiyar Temple )

திருவிசைப்பா பாடல் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில்

புவியியல் ஆள்கூற்று :   10°N 79°E

பெயர் புராண பெயர்(கள்):  தஞ்சாவூர் பெருவுடையார் கோவில்

பெயர்: தஞ்சைப் பெருவுடையார் கோயில்

அமைவிடம்

ஊர்: தஞ்சாவூர்

மாவட்டம்: தஞ்சாவூர்

மாநிலம்:  தமிழ்நாடு

நாடு:  இந்தியா

கோயில் தகவல்கள்

மூலவர்:    பெருவுடையார், பிரகதீசுவரர்

உற்சவர்:  தியாகராஜர்

தாயார்:  பெரியநாயகி, பிரகன்நாயகி

உற்சவர் தாயார்:   கமலாம்பிகை

தல விருட்சம்:   வன்னி மரம்

தீர்த்தம்:    சிவகங்கை தீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள்:  மகா சிவராத்திரி, சித்திரை திருவிழா

பாடல்

பாடல் வகை:     திருவிசைப்பா

பாடியவர்கள்:   கருவூரார்

கட்டிடக்கலையும் பண்பாடும்

கட்டடக்கலை வடிவமைப்பு:  திராவிடக் கட்டிடக்கலை

கல்வெட்டுகள்:  தமிழ் கல்வெட்டுகள்

வரலாறு

தொன்மை:  1000 ஆண்டுகள்

நிறுவிய நாள்:   கிபி-10 ஆம் நூற்றாண்டு

கட்டப்பட்ட நாள்: 7 ஆண்டுகள் (கிபி-1003 முதல் கிபி-1010 வரை)

அமைத்தவர்:  முதலாம் இராசராச சோழன்

வரலாறு

தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்த முதலாம் இராசராச சோழன் சிலை

முதலாம் ராஜராஜ சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்தார்.இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜ சோழனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கி.பி. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010). கோயிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் போதிகைகள் கொண்ட பன்முகத் தூண்கள் காணப்படுகின்றன.

தனித்துவமான திராவிடகட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

மர்மம் விலகாத கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோயில்

தஞ்சை பெரிய கோவில் இதில் முதலாவதாக வருவது, தஞ்சை பெரிய கோவில். இது 1007ஆம் ஆண்டுகளில் ராஜ ராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. இந்திய கட்டடக்கலைக்க பெயர் பெற்ற கோவில் என்பதோடு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் அனைத்துமே சுத்தமான கிரானைட் கற்களாகும். கோவில் விமானமும் 80 டன் எடையுள்ள ஒரே கிரானைட் கல்லால் ஆனது.

விலகாத மர்மம் இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த கோவிலைச் சுற்றிலும் கிட்டத்தட்ட 60 கி.மீக்கு எந்த மலையோ அல்லது குன்றுகளோ கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி முழுக்க பெரிய பெரிய கிரானைட் கற்களைக் கொண்டு இந்த கோவில் கட்டப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் மண்டை காய்கிறார்கள். இன்று வரையிலும் அதற்கான மர்மம் விலகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *