சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து; தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தீவிரம்.
சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 5,000 புறநோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் ஏராளமான மக்கள் இங்கு சிகிச்சைக்கு வருவது வழக்கம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து!
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 3-வது செக்டார் கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ள குடோனில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.தகவலறிந்து 4 வாகனங்களில் நிகழ்விடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம், பிராட்வே தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் நோயாளிகள், பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
விசாரணையில், தீப்பற்றி எரிந்த குடோன் ஆக்சிஜன் சிலிண்டர், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வைக்க பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும், விபத்திற்கு காரணம் மின் கசிவு என தெரியவந்துள்ளது.





























