தஞ்சாவூர்: தஞ்சாவூர் களிகாடுவில் மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட தேர் விபத்தில் 11 பேர் இறந்தனர்
Thanjavur Eleven people have been killed in a chariot accident due to electric shock
தஞ்சாவூர் மாவட்டம் களிகாடு கிராமத்தில் அப்பர் கேவில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் அப்பர் குருபூஜையையொட்டி சித்திரை மாத தேர்விழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தன. இதையடுத்து 3 நாட்கள் அப்பர் சதய விழா கோலாகலமாக துவங்கியது. நேற்று இரவு 10 மணிக்கு தேர் திருவிழா துவங்கியது.
மின்சாரம் தாக்கி 11 பேர் பலி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருள தேர் பவனி துவங்கியது. அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் தேர் வந்தது. உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வரப்படுகிறது.