2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியமானது ?
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்
2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியமானது என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரக பெயர்ச்சிகள் மற்றும் வானியல் நிகழ்வான முதல் சூரிய கிரகணம் போன்றவை நிகழ்கின்றன. ஏற்கனவே ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போன்றவை முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதத்தில் இறுதியில், அதாவது ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழ்கிறது. இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழவுள்ளது.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழவுள்ளது.
இந்த சூரிய கிரகணம் பகுதி கிரகணமாக இருக்கும். இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆனால் இந்த கிரகணத்தை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக், அண்டார்டிக்கா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணலாம்.
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்