உண்மைக்கு உயிர் வருமா ? கவிஞர் காரை வீரையா
பொய் பொய்
குதூகலத்திலும் பொய்
குரூர புத்தியிலும் பொய்
பொய் எவ்வளவு மலிவான பொருள் எல்லாப் பொருட்களுக்கும் தரச்சான்று முத்திரை ஏன்?
போலிகள் பொய் நாட்டியம் ஆடுவதால்
கி.மு.வுக்கு முன்னும்
கி.பி.வுக்கு பின்னும்
பொய் சொகுசு
ஊஞ்சலில் ஆடிக் கொண்டுதான் இருக்கிறது
பாவம் உண்மை
மெலிந்து போய்
ஆடுவதற்கும் பாடுவதற்கும்
வலிமை இல்லாமற் போய்விட்டது.
பொய்க்காதல்
பொய்க் கல்யாணம்
பொய் வாழ்க்கை
எல்லாமே பொய்… பொய்
பொழுது புலர்ந்ததுமே
பொய்களை மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பி விடுகின்றனர்
கிடைத்த வரையில்
ஆதாயம் தேடுகின்றனர்
கண்ணில் பட்டதெல்லாம் பொய்
காதில் கேட்டதெல்லாம் பொய்
குறுக்கு வழியில் வாழ்வு தேடும்
குருட்டு மனிதன் அவனில்லை.
நாம்தான் நம்மைத்தான்
குருடனாக்கிக் கொண்டிருகிறான்
ஆம்!
உண்மையை மூட்டை கட்டி
மூளைக்குள் போட்டு விட்டோம்
பொய்க்கப் பட்டுக் கம்பள வரவேற்பு… கொட்டு முழங்கு கோழி கூவும் வரைக்கும்.. உருப்படுமா உலகம்
உருட்டுக் கட்டை அடிவாங்கினாலும் உள்ளம் என்னவோ
உண்மையினை உதாசீனப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது உண்மையை உசுப்பிவிடும்
நாள் வெகு தொலைவில் ?
மனிதனின் மறுபக்கம்தான் இதற்கு விடை சொல்ல வேண்டும்.
நன்றி
கவிஞர் காரை வீரையா