அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் (புதுக்கோட்டை)
🔅 மூலவர் | வியாக்ரபுரீஸ்வரர் |
🔅 அம்மன் | பார்வதி தேவி |
🔅 ஊர் | திருவேங்கைவாசல் |
🔅 மாவட்டம் | புதுக்கோட்டை |
தல சிறப்பு 🔅 800 ஆண்டு பழமையான வன்னி மரம் உள்ளது. யோக தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் வடிவில் காட்சி தருவது அபூர்வம்.
பிரார்த்தனை 🔅 திருமணத்தடை , குழந்தை பாக்கியம் இறைவனை பிராத்திக்கலாம்.
தல வரலாறு 🔅 காமதேனு பூலோகத்தில் பசுவாக பிறக்க வேண்டும் என்று சாபம் பெற்றது. சாபவிமோசனம் பெற தினமும் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. காமதேனுவின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான். பால் அபிஷேகத்திற்கு வரும்போது புலி வடிவம் எடுத்த சிவன், உன்னை கொன்று பசியாறப் போகிறேன் என்று கூறினார். அதற்கு பசு, நான் சிவ பூஜைக்காக சென்று கொண்டிருக்கிறேன். பூஜையை முடித்து விட்டு நானே உன்னைத் தேடி வருகிறேன். அதன் பின் நீ என்னை கொன்று உன் பசியாறலாம், இதைக்கேட்ட புலி வழிவிட்டது.
பசுவும் சிவபூஜை முடித்து நேரடியாக புலியிடம் வந்தது. இப்போது நீ என்னை சாப்பிடலாம். என்றது புலி வடிவில் இருந்த சிவபெருமான் பசுவின் மீது பாய்வது போல சென்று, ரிஷப வாகனத்தில் உமா தேவியாருடன் காட்சி கொடுத்து. சாப விமோசனமும் தந்தார். அத்துடன் வேண்டும் வரம் கேள் என்றார்.
அதற்கு பசு இறைவா! இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் குறைகளை போக்கவேண்டும் என்று வரம் கேட்டது.
புலி வடிவில் வந்ததால் வியாக்ரபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என்று வேண்டியது.
“வியாக்ரம்” என்றால் “புலி” எனப் பொருள்.
நன்றி…..
Well done
Chockalingam Sundaresan