தண்ணீர் தாகம் 🌺
தண்ணீருக்கு அன்றாடம்
அல்லாடும் காலம் வந்துவிட்டது
பூமியைச் சுரண்ட சுரண்ட
சுண்டைக்காய் போலாகிவிட்டது
தண்ணீர் சுரங்கம்
தண்ணீருக்குத்தான் பஞ்சமே தவிர
தனவான்களுக்கு தண்ணீர் பஞ்சமே இல்லை
பாக்கெட் தண்ணீரிலிருந்து
பாலித்தின் பேரில் வரைக்கும் ரெடி… ரெடி….
பாவம்
ஏழையர்க்கு ஏதடா தண்ணீர்… தண்ணீர்…
ஆனால்…
ஏழையரைக் கண்ணீர் விட
வைக்கவில்லை இந்தத் தண்ணீர்
தண்ணி அடிக்கும் ‘குடி’ மகன்கள்
நூறில் 80 விழுக்காடு
ஏழை மகன்கள்தான்.
என்னவாகும் அவர்கள் வாழ்க்கை
கல்விக்குக் காத்திருக்கும் ஒருமகன்
கல்யாணத்திற்குக் காத்திருக்கும் மகள்
உழைத்த காசெல்லாம்
குடித்துக் கூத்தாடப் போனால்
உருப்படுமா குடும்ப வாழ்க்கை…
அன்பாகவும் சொன்னாள்
அதட்டலாகவும் சொன்னாள் மனைவி
அவன் அடி பணிந்ததோ அந்த
அன்புக்கும் இல்லை அதட்டலுக்கும் இல்லை
‘குடி’ ஒன்றுக்கே அடிமையாகிப் போனான்.
நன்றி
காரை வீரையா...