வாட்ஸ்அப் பயனர் பாதுகாப்பு: இமெயில் வெரிஃபிகேஷன் அறிமுகமாக வாய்ப்பு | whatsapp users account safety email verification feature to introduce
whatsapp users account safety email verification feature to introduce
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசஞ்சர் தளத்தில் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இமெயில் வெரிஃபிகேஷன் என்ற அம்சத்தை வாட்ஸ்அப் சோதித்து வருவதாக தெரிகிறது. இது குறித்த தகவலை வாட்ஸ்அப் அப்டேட் சார்ந்த தகவலை வெளியிட்டு வரும் Wabetainfo தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்டா நிறுவனம் அதிகாரபூர்வமாக தகவல் ஏதும் வெளியிடவில்லை.
இமெயில் வெரிஃபிகேஷன் அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் கணக்குகளை மொபைல் எண் இல்லாமல் சரிபார்த்துக் கொள்ள முடியும் என தெரிகிறது. இது ஹேக்கர்கள் வசமிருந்து பயனர்கள் தங்கள் கணக்குகளை பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் சார்ந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனை பயனர்கள் ஆப்ஷனலாக பயன்படுத்தலாம் என்றும் தெரிகிறது. விரைவில் இந்த அம்சம் அறிமுகமாகலாம் என தெரிகிறது.