செய்திகள்நம்மஊர்

ராமேசுவரம் | சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு மார்ச் 22 வரை காவல் | Fishermen have custody till March 22

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 22 மீனவர்களுக்கு மார்ச் 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காரைக்கால் மற்றும் புதுக்கோட்டையிலிருந்து விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர். மேலும், 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை ஊர்காவல் துறைநீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும்22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மீனவர்கள் 22 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்தஜனவரி மாதம் முதல் இலங்கைகடற்படையினர் இதுவரை 15படகுகளை கைப்பற்றி, 110 மீனவர்களை சிறை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி!

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *