உறவுகள்வாழ்வியல்

குடும்பத்தில் அமைதி நிலைக்க அருட்தந்தை வேதாந்த மகரிஷி கூறும் 10 வழிகள்

1️⃣ நாம் பெற்ற ஞானத்தைப்‌ பயன்படுத்தும் இடம் குடும்பமே! நம் குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும்.

2️⃣ உலகில் கணவன் மனைவி உறவுக்கு இணையாக வேறு எந்த உறவையும் சொல்ல முடியாது.

3️⃣ குடும்பத்தை அறிவுதான் நிர்வாகம் செய்ய வேண்டும். எந்த நிலையிலும் உணர்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4️⃣ குடும்ப அமைதியை காப்பதில், வரவுக்குள் செலவை நிலைநிறுத்தும் செயலும் ஒன்றாகும்.

வேதாந்த மகரிஷி

5️⃣ குடும்பத்தில் அனைவரும் அல்லது பெரும்பான்மையோர் சம்பாதிக்கும் திறன் பெற்றிருப்பது நலம். அதில் ஏற்றத்தாழ்வு இருப்பின் அதை காப்பது,  அனுபவிப்பது, செலவிடுவது ஆகிய செயல்பாடுகளில் சமமான பொறுப்பு வைத்தல் வேண்டும்.

6️⃣ குடும்பத்தில் கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல், கணவனும் பணம் சம்பாதித்தல் செலவு செய்தல், சேமித்தல் என்பது அறவே கூடாது.

7️⃣ விட்டுக் கொடுத்தால், சகிப்புத்தன்மை, தியாகம் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்து வந்தால், குடும்பத்தில் அமைதி நிலவும்.

8️⃣ பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் இருப்பதும் பொறுமை காப்பதும், தவறுகளை மறத்தலும் குடும்ப அமைதிக்கு அடிப்படையான குணங்கள்.

வேதாந்த மகரிஷி

9️⃣ கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடி மனமே இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

🔟 நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்‌பார்கள். பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க, குடும்ப அமைதி அவசியமானது.

நன்றி….

வேதாந்த மகரிஷி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *