பூஜை அறையில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!
வீட்டில் சந்தோஷம் நிறைந்து இருக்க பூஜை அறையில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருப்பது நல்லது.
பூஜை அறையில் இரட்டை விளக்கு ஏற்றினால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
பூஜையறையில் தினமும் காலை, மாலை இரு வேளையும் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
விளக்கு ஏற்றும் திசைகளின் பலன்கள்
🔥கிழக்கு – பக்கம் பார்த்து விளக்கு ஏற்றினால் லட்சுமி கடாட்சம் ஏற்படும் துன்பங்கள் விலகும்.
🔥மேற்கு – பக்கம் பார்த்து விளக்கு ஏற்றினால் பலகைகள் தீரும், கடன் தொல்லை நீங்கும்.
🔥தென் கிழக்கு – பக்கம் பார்த்து விளக்கு ஏற்றினால் அறிவு பெருகும்.
🔥வடக்கு – பக்கம் பார்த்து விளக்கு ஏற்றினால் காரிய சித்தி ஏற்படும்.
🔥வடமேற்கு – பக்கம் பார்த்து விளக்கு ஏற்றினால் ஒற்றுமை நிலவும்.
தெற்கு புறமாக விளக்கு ஏற்றக்கூடாது.
விளக்கேற்றும் எண்ணெயின் பலன்கள் :
🔥நெய் பயன்படுத்தினால் – சுகமும், ஞானமும் அதிகரிக்கும், தீயசக்திகள் நீங்கும்.
🔥நல்லெண்ணை – தீய சக்திகள் விலகும், பிரச்சினைகள் தீரும்.
🔥இலுப்ப எண்ணெய் – சிவபெருமான் அருள் கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.
🔥தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய் – கணபதி, குல தெய்வ ஆசீர்வாதம் கிடைக்கும்.
விளக்கு எண்ணெய் , நல்ல எண்ணெய் , நெய் போன்றவற்றை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம்.
விளக்கேற்றும் திரியின் பலன்கள் :
🔥பருத்தி பஞ்சு திரி – வீட்டில் மங்களம் நிலைக்கும்.
🔥தாமரைத்தண்டு – செல்வம் சேரும்,முன் வினை பாவம் நீங்கும்.
🔥வாழைத்தண்டு – புத்திரபாக்கியம்.
🔥புதுமஞ்சள் வண்ண துணியில் திரி – திருமண தடை நீங்கம்.
🔥துணி திரி – சுகவாழ்வு, குடும்ப நலம்.
🔥பட்டு நூல் திரி – எல்லாவித சுபங்களும்.
இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம் . இவ்வாறு இரண்டு திரி சேர்த்து ஏற்றுவதால் கணவன் மனைவி உறவு ஒற்றுமை மேம்படும்.
விளக்கின் வகைகள் :
🔥குத்து விளக்கு : பிரம்மா, விஷ்ணு, சிவன் சேர்ந்த ரூபமாகக் கூறுவர்.
அகல் விளக்கு , வெண்கல விளக்கு,
செம்பு விளக்கு , பித்தளை விளக்கு,
வெள்ளி விளக்கு , தங்க விளக்கு , குத்து விளக்கு , தூண்டா மணி விளக்கு , காமாட்சி விளக்கு , பாவை விளக்கு. எவர்சில்வரில் விளக்கு ஏற்றுவதில்லை.
நன்றி.... ஆதியா