காதல் வரிகள்
சந்திரனை கண்ட அல்லியே
நித்தம் உந்தன் பெயரை
சொல்லியே
எந்தன்பொழுதும் விடிகிறதே..
உந்தன் கண்ணாடி கன்னங்களின்
முன்னாடி எந்தன் முகம் தெரிகிறதே.. ( காதல் )
உன் கொழுசு ஔி சத்தம் கேட்டிடவே
என் இதய ஔி சத்தம் நிற்கிறதே..
உன் காதல் கடலில் மூழ்கியே
என் காதல் முத்துக்களை கண்டடுத்தேன்..
உன் கன்னக்குழி ஆழத்திலே
என் காதல் மனதை தொலைத்து விட்டேன்..
உன் அன்னநடை அழகிலேயே
என் காதல் யாத்திரை
தொடர்கிறதே.. ( காதல் )
உன் கானக்குயில்லோசையோடு
என் காதல்குயில் பாடுகிறதே..
மனம் தினம் உன்னை காணவே
என் காதல் கண்கள் நாடுதே..
என் காதல் கவிதை வரி கிறுக்கல்களில்
உன் காதலை எழுதிடவே வைரவரியானதே…
காதல்
நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Super 👍 sir