என்னவளே ! – கவிஞர் மா.கணேஷ்
உன் கார்முகில் கூந்தல் இருட்டில் சிக்கி தவித்தேன்…!
உன் சுடர்ஔி இருகண்களின் வெளிச்சத்தில் கரைசேர்ந்தேன்..!
உன் நெற்றி பொட்டுவாய் ஒட்டிக்கொள்ளவே
நெஞ்சம் நினைத்தேன்…!
என் நெற்றியோடு நெற்றியாய் நீ ஒட்டிக்கொள்ளவே நெஞ்சம் நிறைந்தேன்….!
உணவுகள் இருந்தும் உண்ண கரங்கள் மறுக்கிறது..!
உன் கரங்கள் பட்டு அவை அமுதமாகும் வரை…!
உன் காதணி ஔியோசையே என் கவி உணர்வின் மணியோசை…!
உன் புருவத்தில் வில் ஏந்தியே என்றும் போர் செய்ய எனக்கோர் பேராசை..!
என்னவளே எங்கிருந்தாய் இத்தனை நாள்…!
மன்னவனும் மனம் வாடினேன் மதியே உன் வரவை நாடியே…!
மாலைவேளையிலும் மங்கிய இருளிலும் மன்னவன் மனம் வாடுதே..!
மலர்மாலையாய் உன்னைசேரவே..!
மன்னவனும் மனம் மகிழ்ந்தேன் மதி உன் முகம் கண்டேன்..!
வான்மதியும் மயங்கியதே மங்கை உன் முகம் கண்டே..!
திங்களும் திகைக்கிறதே நட்சத்திரங்களும் உன்னுடன் சேர்ந்ததை கண்டே…!
வான்வெளியில் நட்சத்திரங்களின் மாநாடு..!
இருதிங்களில் யார் நம் தலைவி என்பதில்..!
திங்கள் முகத்தவளே உன்னுடன் சேர்ந்து நானும் ஒளிர்கின்றேன்…!
திங்கள் முகத்தவளின் திருமகனாய் தித்திப்பான மணமகனாய்…!
நன்றி
கவிஞர் மா.கணேஷ்