மாறாத அன்பு ! கதை….
உப்புமாவை வெறுக்கும் கணவர்களுக்கு மத்தியில், மனைவி செய்யும் உப்புமாவை நேசிக்கும் கணவர் அவர். அதற்காகவே வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் உப்புமா செய்வார் மனைவி. இரும்பு வாணலியில் எண்ணெய் குறைத்துப் போட்டுச் செய்யும் உப்புமா அடி பிடித்துக் கொள்ளும். தீய்ந்துபோன அடி உப்புமாவை சிரமப்பட்டு விழுங்கும் மனைவி, நன்றாக இருக்கும் மேல் உப்புமாவை கணவருக்கு வைப்பார்.
ஆண்டுகள் உருண்டோடின. இன்று அவர்களுக்கு 30 ஆவது திருமணம் நாள் இன்றைக்கும் உப்புமா செய்திருக்கிறார். வழக்கம் போல பிரித்து வைத்த மனைவிக்கு, நாமே எத்தனை நாள் கஷ்டப்பட்டு இந்த தீய்ந்ததை சாப்பிடுவது? இன்று அவருக்குக் கொடுத்தால் என்ன? எனத் தோன்றியது. அப்படியே செய்தார்.
கணவருக்கு பெரும் சந்தோஷம்., அடடா! திருமண நாளில் மகத்தான பரிசு
தந்திருக்கிறாய்.எனக்கு அடி உப்புமா ரொம்பப் பிடிக்கும். உனக்கும் அதுதான் பிடிக்கும் என இத்தனை நாள் நீ கொடுத்ததை சாப்பிட்டேன். இன்று எனக்காக விட்டுக் கொடுத்திருக்கிறாயா? எனக் கேட்டார்.
மனைவியால் பதில் சொல்ல முடியவில்லை!
நன்றி.....