மரம் !அறம்! கவிஞர் இரா.இரவி!
கெட்ட காற்றை
உள்வாங்கி
நல்ல காற்றை
வெளியிடும் மரம்
நல்ல காற்றை
உள்வாங்கி
கெட்டகாற்றை
வெளியிடுபவன்
மனிதன்
கழிவுநீரை
உள்வாங்கி
நல்ல இளநீர்
தருவது மரம்
நல்ல நீரை அருந்தி
கழிவு நீரை
கழிப்பவன் மனிதன்
உயர்ந்தவன்
தாழ்ந்தவன்
பாகுபாடின்றி
உயர்ந்த
நிழல் தருவது மரம்
உயர்ந்தவன்,
தாழ்ந்தவன்
பாகுபாட்டுடன்
உதிரம் சிந்துபவன்
மனிதன்
மரமெனநிற்காதே என
மனிதரைத் திட்டி
மரத்தை அவமதிக்காதே!
மானிடனே
இப்போது சொல்
மரம் பெரிதா?
நீ பெரிதா?
நன்றி
கவிஞர் இரா.இரவி