சாம்பலாய் முடியும் உடல்.கவிஞர் இரா.இரவி
சதிராடும் மானிடனே உடன் உணர்ந்திடு
சாம்பலாய் முடியும் உடல் உன் உடல் !
தான் என்ற ஆணவம் அகற்றி விடு
தன்னைப் போலவே பிறரை நேசித்திடு !
எல்லாம் எனக்குத் தெரியும் என்று
எப்போதும் நீ எண்ணி விடாதே !
உனக்குத் தெரியாதவை கோடி உண்டு
உன்னை மட்டும் உயர்வாய் எண்ணாதே !
என்னை வெல்ல யாரும் இல்லை
என்று நீ எப்போது எண்ணாதே !
உன்னை வெல்ல ஒருவன் உண்டு
ஒருபோதும் கர்வம் கொள்ளாதே !
நிலையற்ற உலகில் எதுவும் நிலையன்று
நிரந்தரமாய் வாழ்வோம் என்று எண்ணாதே !
எந்த நிமிடமும் நிகழலாம் உன் மரணம்
என்பதை நினைவில் நிறுத்தி அன்பு செய் !
நன்றி
கவிஞர் இரா.இரவி