தினம் ஒரு கோபுர தரிசனம் ! இன்றைய கோபுர தரிசனம் பிறவாத்தானம்
இறைவர் திருப்பெயர் : பிறவாத்தானேஸ்வரர், பிறவாதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்: வாமதேவர்
தல வரலாறு :
இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
வாமதேவ முனிவர் பிறப்புக்கு அஞ்சி, பிறவாமையை அளிக்குமாறு தன் தாயின் கருவிலிருக்கும்போதே, இறைவனை எண்ணி வேண்டினார். இறைவன் கருவுக்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்கு காட்சி தந்து, “காஞ்சிக்கு வந்து எம்மை பூசித்தால் பிறவியணுகா”தென்று அருளிச்செய்தார். வாமதேவரும் அவ்வாறே பூமியிற் பிறந்து, காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிறவி நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறாகும். இதனாலேயே இத்தலம் பிறவாத்தானம் எனப்பட்டது
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் – பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் சென்று, காமராஜ் நகர் குடியுறுப்பு பகுதியில் உள்ள இக்கோயிலை அடையலாம்
நன்றி ஆதியா