அடுக்கக வீடும் உரிமை இல்லாச் சிறைதான் ! கவிஞர் இரா .இரவி
அன்பளிப்பாக மரக்கன்று ஒன்று தந்தார்கள்
அன்போடு வாங்கி வீடு சென்றேன்
அழகான மரம் வளர்க்க ஆசை
எங்கு நடலாம் என்று யோசித்தேன்
வீட்டின் இடது வலது இருபுறமும் வீடு
வீட்டின் முன் பின் இருபுறமும் வீடு
வீட்டின் மேல் கீழ் இருபுறமும் வீடு
பல லட்சம் தந்து வாங்கிய வீடு
ஒரு மரக்கன்று நட உரிமை இல்லை
அடுக்கக வீடும் உரிமை இல்லாச் சிறைதான்
இயற்கை நேசத்திற்கு வழியில்லா அறைதான்
வரும் வழியில் குடிசையைக் கண்டேன்
வாங்கிய மரக்கன்றைத் தந்தேன் ஏழையிடம்
வாங்கிய அவரோ உடன் வீட்டின் அருகே நட்டார்
நன்றி கவிஞர் இரா.இரவி