உறவுகள்உலகம்கவிதைகள்சமூகம்வாழ்வியல்

கதைகளின் காரணங்கள்….. சூர்யா ரெங்கசாமி

கட்ட வெயில் , கால் சட்டையை கையோடு கழட்டி கொண்டே

 காட்டுக்குள் ஓடி , ஓரமாய் பார்த்து ஒக்காரையிலே,

 ஒண்டிய படி ஓலை பாம்பு போகும் ,

ஓலை பாம்பு ஒன்பது பாம்பாகுமென, பாதியிலே பயந்து ஓடி ,

 கால் வழிய  , கால் சட்டை வழிய  -கம்மாயில் குதித்து , குளித்து எழுந்தால்-

குந்திக்கொண்ட்டே குடித்து கொண்டு இருந்தார்.

 குளத்து தண்ணியை- ஒருவர்

”என்ன அய்யனே ,தண்ணி இனிக்குதா ?

முக்கனி ஈடாகுமடா முக்குலத்து தண்ணிக்கு! என்றார்

 அய்யோ அந்த அழுக்கு ?

மீனும் பாசியும் ஆளுகிற குளத்துல அழுக்கு ஏது? அசுத்தம் ஏது? – என்றார்

அய்யோ அப்ப அந்த மீனு…

காட்டுக்குள் ஓடிய காரணம்- கண்ணுக்குள்

ஆயிரம் கதை சொல்லும்..

மலையாடு மாதிரி மண்டையில மயிர வச்சுக்கிட்டு ..

பொழுதுக்குள்ள முடிவெட்டி வரல- பொத்த பானதான் தலைக்கு வரும் –

அம்மா

காசு வேணும் கடைக்கு போக என்றால்

 குடுக்குற நெல்லுக்கு கொஞ்சமாவது அவனுக்கு வேலை குடுங்கடா

 நம்ம ஊரு ஆளுகிட்ட போய் வெட்டி வா.

பல ஆண்டுகள் பழக்கம் இருந்தும் , படியவில்லை -இன்னமும்

பக்குவமாய் வெட்டி விட அவனுக்கு.

கத்தரியில்  வெட்ட சொன்னால் கத்தியாலே வெட்டும் வேலைக்காரன்

 சிகை வெட்டவா? ,சிரம் வெட்டவா? போறோம் என்று தெரியாமலே

 போய் சேர்ந்தேன் -தலையை குடுத்து

முடி  வெட்ட சொன்னேன் ….

என்னடா வெட்டி இருக்க மலையாடு மயிறு போல-

சொட்ட சொட்ட யா -அம்மா

பொங்கி வரும் கண்ணீரையும் வார்த்தைகளையும் மடக்கி

முடி இல்லா மண்டையை தடவி கொண்டே ..

அய்யோ ! அம்மா ! நீ மலையாடு பார்த்து இருக்கியா? இல்லையா ?

அந்த கழுதைய நான் எங்கடா கண்டேன்- அம்மா

ஆயிரம் கதைகள் சொல்லுபவள்..

பள்ளி முடித்து வீடு திரும்பி புத்தக பை .

வைத்துவிட்டு வாசலுக்கு வருவதற்குள்..

பக்கத்து வீட்டு நண்பன் வாயில் எச்சில் ஒழுக,

 காமர் கட்டு கடித்து காமிச்சுக்கிட்டே கடந்து போவான்.

காமர் கட்டு க்கு காசு வாங்க அப்பாவிடம் கொஞ்சலாய் கேட்கையில்

ஒன்னுக்கு ,ஒன்பது கமார் கட்டுக்கு காசு எடுத்து வைத்து, -தம்பி

ஒன்பதாம் வாய்ப்பாடு ஒரு தரம் சொல்லிட்டு எடுத்து போப்பா -என்பார் .

இவ்வளவு தானா என்று ..

ஓர் ஒன்பது ஒன்பது .

ஈர் ஒன்பது ,,ஒன்பது ,பத்து ….. பதினெட்டு

 மூ ஒன்பது ஒன்பது பத்து, பதினொன்னு…….

 வாய்ப்பாடு வாசித்து கொண்டு இருக்கும் போதே

 வாட சாப்பிட -எவ்வளவு நேரம் கூப்பிட்றது- அம்மா

  சோத்து தட்டோடு வருவாள்..

 திரும்பி அப்பாவை பார்க்கையில் …

அனேகமா துங்கி இருப்பார் ஆனால் அவர்

வைத்த காசு அப்படியே இருந்து ஆயிரம் கதை சொல்லும்

புது சரடு கட்டியவள் பொசுக்குனு வெளியே வந்து வாந்தி எடுக்கவும்

புயலென பூட்டி நின்றனர் புது பொண்ணை பக்கத்து வீட்டார்

வாந்தி வர காரணம்.

புது சோறு சேரலையோ,,புது பானை பொங்கலையே.

 புளி எரிச்சலா இருக்குமோ ,,வயிறு எரிச்சலா இருக்குமோ ,

வண்டு தீண்டி இருக்குமோ,, வாய்க்கு பூட்டு இருக்குமோ.,

வார்த்தைகள் பலவிதம் வந்தன,

 வாய்ப்புகளை தேடி அலைந்தது

வாந்தி எடுத்தவள் வாய் குளற நின்றாள்.

காரணம் கதையாகி விடுமோ என்று கண்ணுருட்டி -நின்றாள்

 வாய் முத்தத்துக்கு வாஞ்சனையோடு போனவள்..

 வாந்தி எடுத்தாள் அவள் வாயில் இருந்த ,வயக்காட்டு வாசனை கண்டு.

அந்த வாந்தியும்

வயக்காட்டு வாசையும் -சொல்லும் ஆயிரம் கதைகள்

கார்த்திகை மழையில்

 கடுமையாக நனைத்து , குளிரோடு குளித்து

 தலை துவட்டி சாரம் கட்டி,-ராத்திரி

சாப்பிட போகையிலே

புது சோறு வடித்து ,ஆஞ்சு எடுத்த காருவாடு கொழம்பு போட்டு

பொசுக்குனு சாப்பிட்டுரு சூடு ஆறதுக்குள்ளே என்பாள் ,

சுடு சோறுக்கும் , உண்டு சொர்க்கம் என்பாள்

ஆயிரும் கதை சொல்லும் பாட்டி..

கதைகள் ஆயிரம்

 கருவோடு, கலப்படமின்றி கரைந்தே

இருக்கும் கரையாத நம் கண்களில்.

கலப்பிடமில்லாத கதைகள் கலந்தே இருந்தாலும்

 நம் கண்களில் கானும் கதைகள்  என்னமோ

அலங்கரிக்க பட்ட பேருந்தில் ஆர்ப்பாட்டம்

இல்லாமல் ஆராய்ச்சி என

அளந்து பார்க்கும் ஆளுமைகளையும்

தேனீர் இல்லாத கோப்பையுடன்

தேவை இல்லாத இடங்களில் எல்லாம்

 தேடி போய் தரும் தொந்தரவுகளையும்தான் .

கதைகளின் காரணங்கள்

சூர்யா ரெங்கசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *