ஆன்மிகம்கோவில்தெய்வீக குறிப்புகள்

நோய்கள் நீக்கி நல் ஆரோக்கியம் அருளும் தன்வந்த்ரி மகாஹோமம்… நீங்களும் சங்கல்பிக்கலாம்!தன்வந்திரி (Dhanvantari) 

Dhanvantari Mahahoma which cures diseases and bestows good health… You can also Sankalp! Dhanvantari (Dhanvantari)

தன்வந்திரி (Dhanvantari) இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி(தனிக்கோயிலில்) காணப்படுகிறார். Dhanvantari is one of the deities worshiped for good health in Hinduism. This form, which is regarded as an incarnation of Vishnu, does not fall within the Dasavathara. Dhanvantri (separate temple) is found only in the famous Vishnu temples.

தேவர்கள் அசுரர்களுடன் போராடி வலிமை இழந்தவர்களானார்கள். அவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காகப் பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்திரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தை தேவர்கள் உண்டதால் நிறைவாழ்நாளைப் பெற்றார்கள். The Devas became weak after fighting the Asuras. They feared for their lives. So they appealed to Brahma, the creator god, and Indra, the chief of the gods. The ocean of milk was used to give life to the gods. Puranas say that then Dhanvantri incarnated from the sea. The Devas got full life by eating the nectar offered from the casket in his Thirukaram.

Dhanvantari Mahahoma which cures diseases and bestows good health... You can also Sankalp! Dhanvantari (Dhanvantari)

தன்வந்திரி ஸ்லோகம்

சதுர்புஜம் பீத வஸ்திரம்

ஸர்வாலங்கார சோபிதம்

த்யோயேத் தன்வந்த்ரிம்

தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது, சூரியனே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. தன்வ என்ற பதத்துக்கு வான்வெளி என்று பொருள். தன்வன் என்றால் வான்வெளியில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம். எனவே, இவரையே சூரியன் என்றும் சொல்வார்கள். சூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரியக் கடவுளையே குறிப்பிடுகிறது. தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது.The Brahma Vaivartha Purana says that Dhanvantri was the most important of the sixteen students who learned Ayurveda from the Sun God. One who is called Dhanvantri is one who lives in the sky. That is, there is a reference in the Puranas that Surya is the Dhanvantri. The word tanva means space. Dhanvan means one who roams in the sky.Therefore, he is also called Surya. In the Sukta Granths, the name Dhanvantri refers to the Sun God. Matsya Purana says that Dhanvantri is the creator of Ayurveda. Padma Purana mentions Dhanvantri as the king of medicine and the best physician. Vayu Purana, Vishnu Purana etc also tell about Dhanvantri avatar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *