வாழ்வியல்கவிதைகள்

மகாகவி பாரதி ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

விவேக வரிகளால்
வீரம் விதைத்தவன்
மகாகவி பாரதி

மூடநம்பிக்கைகளின் எதிரி
தன்னம்பிக்கையின் நண்பன்
மகாகவி பாரதி

வேறுபாடு இல்லை
எழுத்திற்கும் செயலுக்கும்
மகாகவி பாரதி

யுகம் கடந்து வாழும்
யுக கவிஞன்
மகாகவி பாரதி

துணிவின் முகவரி
அன்பின் அடையாளம்
மகாகவி பாரதி

இயற்கை நேசன்
இனியதமிழ்த் தாசன்
மகாகவி பாரதி

பன்மொழிப் புலவன்
பண்டைத்தமிழை உயர்த்தியவன்
மகாகவி பாரதி

கொள்கைக் குன்று
கவிதைகள் கற்கண்டு
மகாகவி பாரதி

முறுக்கு மீசைக்காரன்
முத்தமிழன் சொந்தக்காரன்
மகாகவி பாரதி

உடலால் மறைந்தாலும்
பாடலால் வாழ்பவன்
மகாகவி பாரதி

நன்றி
கவிஞர் இரா.இரவி

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *